இடைவெளியில் நிற்றல் Jeffersonville, Indiana, USA 63-0623M 1சகோதரர் நெவில் அவர்களே! தங்களுக்கு நன்றி. ஜெபத்திற்காக தலை வணங்குகையில் நாம் சற்று நேரம் எழுந்து நிற்போமாக. நாம் தலை வணங்குவோமாக. உங்களுக்கு விசேஷித்த ஜெப வேண்டுகோள்கள் இருப்பின், உங்கள் கரங்களை உயர்த்துவதின் மூலம், அவைகளை தெரியப்படுத்துவீர்களாக. இப்பொழுது, உங்களுடைய தேவைகளை உங்கள் இருதயத்தில் நினைத்து, அவைகளை பரம பிதாவினிடத்தில் கேளுங்கள். அவர் அவைகளை உங்களுக்கு அருளுவார். 2எங்கள் பரம பிதாவே, நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் இப்பொழுது உம்மிடத்தில் வருகிறோம். நாங்கள் வாஞ்சிக்கிறவைகளை ஜெபத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்பதை விசுவாசித்தவர்களாக நாங்கள் வருகிறோம். நாங்கள் கேட்பவைகளை பெற்றுக்கொள்வோம் என்று நாங்கள் விசுவாசிப்போமானால், அவைகள் எங்களுக்கு அருளப்படும். அந்த வாக்குத்தத்தமானது மிகவும் உண்மையுள்ளதாயிருக்கிறது. இத்தனை ஆண்டுகளிலும், அவ்வாக்குத்தத்தமானது பரீட்சிக்கப்பட்டதைக் கண்டு, அவையெல்லாவற்றிலும் அது உண்மையுள்ளதாகவே இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் ஜீவனைக்காத்து, மீண்டும் இங்கு கர்த்தருடைய சபையில் ஒருமித்துக் கூடுவதற்கு எங்களுக்கு அருள் செய்தமைக்காக, முதற்கண் உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். -மத் 21:22 சத்தியத்தில் கட்டப்பட்டு, சத்தியத்திற்காக நிலைநிற்கிற இந்த சபைக்காகவும், போதகருக்காகவும், இந்த மகத்தான சத்தியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தெய்வீக சமூகத்தில் இருக்கிற ஒவ்வொரு நபருக்காகவும் உமக்கு நன்றி. எங்களுக்குத் தேவையான புத்தியை எமக்கருளி, அதினால், நாங்கள் தமக்கு இன்னும் அதிகமான ஆற்றலுள்ள ஊழியக்காரராக விளங்க, இன்றைக்கு எங்கள் மேல் இரக்கமாயிருக்க வேண்டுகிறோம். எங்களுடைய ஜீவியங்களிலிருந்து மிகச் சிறந்ததை நீர் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, நாங்கள் உம்மை பயபக்தியோடும், உண்மையுள்ள இருதயத்தோடும் சேவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய இதயங்களின் வாஞ்சையாயிருக்கிறது. ஒவ்வொரு நாளிலும், அந்த நாளுக்கென்று நாங்கள் செய்கிற காரியங்களினால் நீர் மிகவும் பிரியப்படத்தக்கதாக, எங்களுடைய நடை அமைந்திருப்பதாக. 3இன்று இங்கே தேவ சமுகத்திலும், உலகமெங்கிலும் உள்ள உம்முடைய ஒவ்வொரு பரிசுத்த ஸ்தலங்களின் பிரசன்னத்திலும் வந்துள்ள நோய்வாய்ப்பட்டிருக்கிறவர்களுக்காகவும், சகாயம் வேண்டுபவர்களுக்காகவும், இப்பொழுது நாங்கள் ஜெபிக்கிறோம். மகத்தான யேகோவாவானவர், தமது வல்லமையோடு வந்து நோயுற்றவர்களை, இடுக்கணில் உள்ளவர்களை குணமாக்குவாராக. உமது மகத்தான நாமத்தை மகிமைப்படுத்தும். இக்காலையில் இருதயங்களில் இரகசியமாய் ஏறெடுக்கப்பட்ட ஜெப வேண்டுகோள்களை ஆசீர்வதியும். அவர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டு தத்தம் கரங்களை உயர்த்தினார்கள் என்பதை அவர்களது இருதயங்களை நீர் உற்று நோக்கிப் பார்த்து அறிகிறீர். அவர்களது இதயத்தின் வாஞ்சைகளை நீர் அவர்களுக்கு அருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் மேலும் உம்மை ஆராதிக்கையில் எங்களை ஆசீர்வதியும். எம்மாவூருக்குப் போனவர்கள், “அவர் வழியில் நம்மோடு பேசுகையில் நம்முடைய இருதயம் கொழுந்துவிட்டு எரியவில்லையா” என்று கூறியது போல், இக்காலையில் இக்கட்டிடத்தை விட்டு நாங்கள் புறப்பட்டுச் செல்கையில், நாங்களும் அவ்வாறு கூற இயலும் படி எங்களுக்கு அருளும். இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்). 4- லூக் 24:32 5. இக்காலையில் மீண்டும் இங்கே கர்த்தருடைய சந்நிதானத்தில், ஜனங்களின் சபையில், வந்திருப்பது நல்லதாக இருக்கிறது என்று கூற நான் விரும்புகிறேன். சில மாதங்களுக்குப் பிறகு நான் திரும்பி வந்திருக்கிறேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் விரும்பினேன். ஆனால் அது கர்த்தருடைய சித்தமாயிருக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன். அல்லது, எவ்விதத்திலோ, இங்குள்ள இந்த பள்ளத்தாக்கு, எனக்கு மிகவும் ஆரோக்கியக்குறைவானதாக இருக்கிறது. இங்கே வீசுகிற காற்று எனக்கு அலெர்ஜிக் ஆக இருக்கிறது. இங்குள்ள ஜன நெரிசலான இடங்களில்.... நான் மிகவும் வியாதிப்பட்டேன். எனக்கு குளிரும் நடுக்கமுமாக இருந்தது. அதனால் என்னால் வரமுடியவில்லை . நான் எழுந்து வருவதற்கு என்னையே கட்டாயப்படுத்த முயற்சித்த போதிலும் முடியவில்லை. இந்தப் பள்ளத்தாக்கு ஆரோக்கியக் குறைவானதாக இருக்கிறது. நான் இங்கு வசிப்பது எனக்கு உகந்ததாக கருதப்படவிலை. 5இப்பொழுது கர்த்தர் எங்களை ஊழியம் செய்வதற்காக அழைத்த தேசத்தின் வெவ்வேறு இடங்களில், கர்த்தருடைய ஆராதனைகளில் எங்களுக்கு மகத்தான வேளை உண்டாயிருந்தது என்று உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம். கர்த்தர் எங்களை ஊழியம் செய்வதற்காக இத்தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கும் அழைத்துச் சென்றபோது, கர்த்தருடைய ஊழியங்களில் எப்படிப்பட்ட மகத்தான வேளை எங்களுக்கு உண்டாயிருந்தது என்பதைப்பற்றி, இப்பொழுது நாங்கள் உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம். சகோதரன் நெவில் அவர்கள் என்னிடம் வந்து, இங்கு ஜனங்கள் மத்தியில் வந்திருப்பதினால் ஏதாவது அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால் ஒழிய, அது வரையில், நான் குறிப்பிட்ட எந்தப் பொருளின் பேரிலும் பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நாமெல்லாரும் அறிந்திருக்கிறபடி, சகோதரர் நெவில் அவர்களை நேசிக்கிறோம். நான் அவரையும், அவரது மனைவி பிள்ளைகளையும் நினையாமலும், ஜெபிக்காமலும் இருந்த நாளே இல்லை எனலாம். அவர் தாமே தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தேவையான பெலத்தை தேவன் அவருக்கு தருவாராக. நாம் அறிந்திருக்கிறபடி நமது காலமானது முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாம் நாளைய தினத்திற்கு — அதாவது சாயங்கால வெளிச்சத்தின் நாளின் முடிவுக்கு - மிகவும் அருகில் வந்து விட்டோம். 6எங்களது குடும்பம் மேற்கில் இருந்து வருகிறது. நாங்கள் யாவரும் நலமுடன் உள்ளோம். என் உடல் எடையில் 12 பவுண்டுகள் கூடியிருந்தது. நான் இங்கு திரும்பி வந்த பிறகு அதில் 10 பவுண்டுகள் குறைந்து விட்டது. பில்லிபாலுக்கு 18 பவுண்டுகள் கூடியிருந்தது. ரெபெக்கா, சாரா மற்றும் ஜோசப் ஆகியோருக்கும் எடை கூடியுள்ளது. இயல்பாகவே, என் மனைவிக்கு எடை கூடவில்லை . எனவே, அதை நான் இங்கு கூற துணியவில்லை .... நீங்கள் அறீவீர்கள். ஏனெனில் நான் சற்று நேரம் கழித்து வீட்டுக்குப் போக வேண்டும். எங்களுக்கு மிகவும் அற்புதமான சமயம் உண்டாயிருந்தது. அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 7நான் திரும்பி வர எண்ணினேன். ஆனால் அதில் ஒரு பெரிய காரியமிருக்கிறது. இரண்டு காரியங்களை நாங்கள் இழந்திருந்தோம். அதின் ஸ்தானத்தை வேறு எந்த ஒன்றும் இட்டு நிரப்ப முடியாது. ஒரு காரியம், இங்குள்ள நமது நண்பர்களும், இந்த சபையும்தான் நாம் எங்கு சென்ற போதிலும் நண்பர்களைக் காண்கிறோம். நமது நண்பர்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் இன்ப துன்பங்களிலெல்லாம் உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கிற நண்பர்களைப் பற்றின காரியம் என்னவெனில், அவ்வித நண்பர்களை வேறு எந்த வகையிலும் எந்த ஒன்றோடும் ஈடுகட்ட முடியாது. மற்ற எந்தவொரு நண்பனும் எப்படியிருந்தபோதிலும், இந்த வகை நண்பனோடு ஈடுகட்ட முடியாது. நீங்கள் அவைகளுக்குள் பிழிந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அவர்களுக்குள் இசைந்து ஒன்றாயிருக்கிறீர்கள். நாம் ஒருமித்து, நாட்கள் செல்லச்செல்ல கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் பிரித்திட முடியாது. அதைப்பற்றி நினைப்பதே கடினமானது. 8கொரிந்தியருக்கு பவுல் எழுதிய வசனம் என்று நினைக்கிறேன். அவ்வசனம் என் நினைவுக்கு வருகிறது. அதில், “நிகழ்காலமோ, எதிர்காலமோ, அதிகாரங்களோ, நிர்வாணமோ, பசியோ, அழிவோ, எந்த சிருஷ்டியோ, ஜீவனோ, மரணமோ, ஆகிய எந்தவொன்றுமோ, இயேசுகிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்க மாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” என்று அவர் கூறுகிறார் (ரோமர் 8:36-39). ஏன், மரணம் கூட நம்மைப் பிரிக்க முடியாது. ஏனெனில், நாம் இதயத்திலும், தேவனுடைய வார்த்தையைப்பற்றியுள்ள இந்த மகத்தான ஐக்கியத்திலும் ஒருமித்து இணைக்கப்பட்டிருக்கிறோம். மரணம் கூட நம்மைப் பிரிக்க முடியாது. எல்லாக் காலங்களிலும், யுகங்களிலும், நித்திய நித்தியமாக நாம் ஐக்கியப்பட்டிருப்போம். - ரோ 8:36 9பின்பு, ஒவ்வொரு நாள் காலையிலும் பிள்ளைகள்... நாம் எங்கு சென்றாலும், இயல்பாகவே, சபைக்குச் செல்கிறோம். ஆனால் இந்த மூலையில் உள்ள இந்த சிறிய கூடாரம் போல் இல்லை. அதைப் பற்றி ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த சிறிய பழைய ஆலயமணி காலையில் உயரேயிருந்து அடிப்பதைக் கேட்கிற வாய்ப்பில்லை. அது உரிய வேளையில் அடிக்கிறதில்லை. ஏனெனில் இன்னும் ஆலயமணிக்காக கோபுரம் கட்டவில்லை . பின்பு, ஒருமித்து இங்கே பென் தெருவில் எட்டாம் எண்ணில், முப்பத்ததைந்து ஆண்டுகளுக்கு முன், எனது முதல் சபையைக் கட்டுவதற்கு அந்த பழைய சேறான இடத்தில் முழங்கால் படியிட்டேன். எவ்வாறு கர்த்தராகிய இயேசு என்னோடு இடைப்பட்டார். இன்றைய தினத்தில், அது ஒரு சிறிய புனித ஸ்தலமாகவுள்ளது. செங்கல்லும் சுண்ணாம்புக்காரையும் ஆனது.... அது ஒரு புனித ஸ்தலமாகவுள்ளது. என் நினைவுள்ள வரை அது நீடித்திருக்கும். எது ஒரு சபையை உருவாக்குகிறது. அது வெறும் கட்டிடமல்ல. அதின் கீழ் தேவனை தொழுது கொள்ளும்படி கூடிவருகிற ஜனங்கள் தான் அந்தச் சபையாகும். இக்காரியங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 10நமக்கு அதிகம் நேரமில்லையாதலால், நிகழ்ந்து போன சில காரியங்களைப் பற்றி நான் உங்களோடு உரையாடலாம் எனக்கருதுகிறேன். அதன் பிறகு, நான் இங்கு இருக்கையில், சில செய்திகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்யவிருக்கிறேன். ஏனெனில் நான் உங்களெல்லாரிடமும், எந்தவொரு புதிய செய்தியும் முதலில் இந்தப் பலிபீடத்திலிருந்துதான் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறேன். இங்கிருந்துதான் எல்லா செய்தி ஒலி நாடாக்களும் தயாரிக்கப்படுகின்றன. வேறு எங்கிருந்துமல்ல. இப்பொழுது சகோதரன் ஜிம்மும் ஏனையோரும் கூட்டத்தில் செய்தி அடங்கிய ஒலி நாடாக்களை விற்கிறார்கள். ஆனால் அவைகள் எப்பொழுதும் முதலில் இங்கிருந்துதான் புறப்படுகிறது. நீங்கள் அதை எவ்வகையிலும் சோதித்தறிந்து கொள்ளலாம். நான் அப்படிச் செய்வதாக உங்களுக்கு வாக்குரைத்திருக்கிறேன். கர்த்தர் வரும் வரையிலும் நாம் தொடர்ந்து அப்படியே செய்வோம். அதை மாற்றுவதில்லை. 11உலக முழுவதிலும் செய்தி ஒலி நாடாக்களின் வாடிக்கையாளர்கள் நமக்கு உள்ளனர். எனவே செய்தியானது பூலோகத்தை சுற்றி வருகிறது. காடுகளிலும் மற்றும் எவ்விடங்களிலும் டேப் ரிக்கார்டுகள் மூலம் அது பரவி வருகிறது. பல்வேறு மொழிகளிலும் செய்தியானது மொழிபெயர்க்கப்பட்டு அஞ்ஞானிகளுக்கும் மற்றுள்ளோருக்கும் செல்கிறது. எனவே, நான் இங்கிருக்கிற வேளையில், கர்த்தருக்குச் சித்தமானால் சில புதிய செய்திகள் ஒலி நாடாக்களில் பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் நமது போதகர், தான் சொல்லும்படி ஏதாவது தனது உள்ளத்தில் அவருக்கு கொழுந்துவிட்டு எரியுமென்றாலும், நல்லது, அதையும் இன்று இரவில் பதிவு செய்ய விரும்புவேன். 12பிறகு நான் நாளை அல்லது செவ்வாய் கிழமையன்று அர்கான்ஸாஸ் செல்ல விரும்புகிறேன். எதற்கென்றால், அங்குள்ள அசோசியேடட் ப்ரதர்ஹீட் ஆஃப் க்றிஸ்டியன்ஸ் (ஒருங்கிணைந்த சகோதரத்துவ கிறிஸ்தவர்கள்) என்ற ஸ்தாபனத்தின் கன்வென்ஷனில் அவர்களுக்கு உதவவே. நான் இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே அதில் பங்குபெற வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் நான் இன்றோ இங்கு நமது கூடாரத்தில் இருந்து விட்டேன். அப்படியென்றால், நான் அங்கு வெள்ளிக் கிழமையன்று கூட்டத்தின் கடைசி நாளன்று போவேன். பிறகு சனிக்கிழமை இரவில், ஞாயிறு காலை இங்கு இருக்கத்தக்கதாக திரும்பி வந்து விடுவேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னொரு செய்தி ஒலி நாடாவில் பதிவு செய்வேன். அதன்பிறகு சில நேரத்தில், மேலும் சில ஒலி நாடாக்களை இங்கிருந்து நாம் புறப்படும் முன் தயார் செய்து விடலாம். 13லூயிசியானாவில் பேட்டன் ரூஸ் என்ற இடத்தில் நடைபெறும் கன்வென்ஷனுக்காக நான் மிகுந்த பாரமுள்ளவனாக இருக்கிறேன். அதன் பிறகு நான் திரும்பி வருவேன். அதற்குப் பிறகு, நான் ஆங்கரேஜூக்கு எவ்விதத்திலும் போக வேண்டியவனாக இருக்கிறேன். ஃபேர்பாங்க்ஸ் மற்றும் ஆங்கரேஜ் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு, கிறிஸ்தவ பூரண சுவிசேஷ வியாபாரிகளின் கூட்டத்திற்குச் செல்லவேண்டியுள்ளது, மறுபடியும் அங்கிருந்து இங்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு ஜூலை கடைசி வாரத்தில் கர்த்தருக்குச் சித்தமானால் சிக்காகோ செல்ல வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் பிறகு, பிள்ளைகள் மீண்டும் தங்கள் பள்ளிகளுக்குச் செல்லும்படி அவர்களை அரிசோனாவிற்கு விரைந்து அனுப்ப வேண்டும் என கருதுகிறேன். ஏனெனில், சார்லி! நான் ஆகஸ்ட் 15ம் தேதி வாக்கில் இங்கு இருந்தாக வேண்டும். ஏனெனில், கர்த்தருக்குச் சித்தமானால், அந்த சமயத்தில் நான் கென்டக்கியில் இருக்க விரும்புகிறேன். யாவரும் நகைக்கின்றீர்கள். நான் சொன்னதின் அர்த்தம் என்னவென்று இங்கு வந்திருக்கும் புதியவர்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். அந்த நாட்களில்தான் அணில் வேட்டையாடும் பருவம் ஆகும். பிரசங்க பீடத்திலிருந்து இதைப்பற்றி சொல்வது தவறாக கருதப்படத்தக்கதல்ல என்று நம்புகிறேன். அங்கு இரண்டு வாரங்கள் என்னுடைய விடுமுறைக்காக அதை நான் சார்ந்திருக்கிறேன். 14பில்லி எழுதி வைத்துள்ள சில சிறிய குறிப்புகள் இங்கு உள்ளன. அவற்றில் ஒன்றில், “தந்தையே, சகோதரர் நெவில் அவர்கள், தாங்கள் இரு குழந்தைகளை பிரதிஷ்டை செய்யக் கூடுமா என்று அறிய விரும்புகிறார்” என்று எழுதியிருக்கிறார். நிச்சியமாக செய்வேன், அது அருமையானது. இப்பொழுதே அந்த குழந்தைகள் பிரதிஷ்டை ஆராதனையை நாம் வைத்துக் கொள்வோம். அதன்பிறகு, அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களை, சம்பவித்த காரியங்களைப் பற்றி உரையாடுவதற்காக எடுத்துக் கொள்வோம். அநேக மக்களுக்காகவும், சபைகளுக்காகவும் .... இது ஒரு திறந்த கூடாரமாயிருக்கிறது. இது ஒரு போதும் ஸ்தாபனமாக இருந்ததில்லை. அது ஒரு போதும் அவ்வாறு ஆகாதிருக்க தேவன் அருள் செய்வாராக. ஏனெனில், இந்த ஸ்தலம் பிரமாணம் இல்லாத, ஆனால் அன்புள்ள இடமாக; வீண் சித்தாந்தங்கள் உள்ள இடமாக அல்ல, கிறிஸ்து உள்ள இடமாக; கோட்பாட்டுப்புத்தகம் உள்ள இடமாக அல்ல, வேதாகமம் உள்ள இடமாக இருக்க நாம் விரும்புகிறோம். நமக்கு அங்கத்துவம் (Membership) இல்லை , ஒருவரோடொருவர் ஐக்கியம் (Fellowship) தான் இருக்கிறது. எல்லா மக்களுக்கும், எல்லா ஸ்தாபனங்களுக்கும், இங்கு நாம் தேவனுடைய வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொண்டிருக்கிறோம். அங்கு தானே யாவரும் தாங்கள் தாராளமாக வரவேற்கப்படுவதை உணரலாம். உபதேச ரீதியாக, நாம் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம். நாம் இங்கு அறிஞர்கள் கூட்டம் அல்ல. நாம் சாதாரண மக்கள் தாம். அப்படிப்பட்ட நாம் வேதத்தை அப்படியே வாசித்து, அது சொல்வதினின்றும், புறம்பானதொரு வியாக்கியானத்தை அதற்கு அளிக்காமல் இருப்பவர்களாக இருக்கிறோம். 15ஒரு நாளில் தேவன் உலகத்தை வேதாகமத்தினால் நியாயந்தீர்ப்பார் என்று விசுவாசிக்கிறேன். அவர் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார். நியாயந்தீர்ப்பதற்கென்று ஒரு நிர்ணயம் இல்லையென்றால், என்ன செய்யவேண்டுமென்பதை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? தேவனிடத்தில் அநீதியை கற்பிக்க முடியாது.தேவன் தாமே மக்களை நியாயந்தீர்ப்பதற்கென்று தமக்கொரு நிர்ணயத்தை உடையவராக இருத்தல் வேண்டும். எனவே, அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில், அப்பொழுது, க்ரீக் சர்ச் (தி ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்) மற்றும் உள்ள அந்த சபைகள் அனைத்தும், மற்றும் உலகமனைத்தும் இழந்துபோகக் காணப்படும். அவர் ரோமன் சபையைக் கொண்டு அல்ல, க்ரீக் ஆர்த்தடாக்ஸ் சர்ச்-ஐக் கொண்டு உலக முழுவதையும் நியாயந்தீர்ப்பாரெனில், அப்பொழுது ரோமன் சபையும் மற்றுமுள்ளவர்களும் இழந்து போவார்கள். லுத்தரன் சபையைக்கொண்டு அவர் உலகத்தை நியாயந்தீர்ப்பாரெனில் ப்ரெஸ்பிடேரியன் சபை இழந்து போகப்படும். ப்ரெஸ்பிடேரியன் சபையைக்கொண்டு தேவன் நியாயந்தீர்ப்பாரெனில், அப்பொழுது லுத்தரன்களும், பாப்டிஸ்டுகளும் இழந்து போய்விடுவார்கள். பார்த்தீர்களா? ஆகவே, அவர் பெந்தேகோஸ்தேயினரைக்கொண்டு நியாயந்தீர்ப்பாரெனில் அப்பொழுது பெந்தேகோஸ்தேயினரைத் தவிர ஏனையோர் அனைவரும் ஒழிந்து போவார்கள். 16ஆனால், அவர் எந்த ஒரு சபையைக் கொண்டும் நியாயந்தீர்க்கப் போகிறதில்லை . ஏனெனில் என் கருத்துப்படி, அவர்களுக்குள் அதிகமான வேறுபாடுகளும், குழப்பங்களும் காணப்படுகின்றன. வேதம் கூறுவதாவது: “தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்ப்பார்”. அது வேத பூர்வமானது. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்.“ அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதாக வேதம் கூறுகிறது. எனவே, அவரே வார்த்தையாயிருக்கிறார். இது கிறிஸ்து எழுத்து வடிவத்தில் இருக்கிறார். ரோமன் கத்தோலிக்கரிடையே அப்போகாலிப்ஸ் (Apocolypse) என்றும், ப்ராடெஸ்டெண்டுகளிடையே வெளிப்படுத்தின விசேஷம் என்றழைக்கப்படும் புத்தகத்தில் 22-ம் அதிகாரத்தில், புத்தகத்தின் முடிவிலே, இயேசு தாமே கூறியுள்ளார்: ”இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்“. எனவே நான் இவ்வாறாக வாசிப்பதின் காரணம் இது தான். வேதம் கூறுவதை அப்படியே கூறுங்கள். வேதத்தில் தாம் எழுதாத காரியங்களையும் கர்த்தர் செய்வார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அவர் வேதத்தில் என்ன எழுதியிருக்கிறாரோ அதில் அப்படியே நிலைத்திருக்கும் வரையும் அது அருமையாக இருக்கும். -யோ 1:1,14 ரோ 3:6 எபி 13:8 எபி 10:30 வெளி 22:18,19 17இப்பொழுது சிறு குழந்தைகள் பிரதிஷ்டை , மெத்தோடிஸ்டுகள் குழந்தைகளைத் தெளிக்கிறார்கள். கத்தோலிக்க சபை அல்லது லுத்தரன் சபையில் பிள்ளைகள் 12 வயது அடையும் போது தங்களது முதல் நற்கருணை ஆராதனையில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் பிறக்கும் போது, ஒருவிதமான ஞானஸ்நான ஆராதனையும் அவர்களுக்கு உண்டு . குழந்தைகளுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். சிறு குழந்தைகள் ஞானஸ்நான விஷயத்தில் தான், நசரேயர்கள் மற்றும் மெத்தோடிஸ்டுகளிடையே அநேக ஆண்டுகளுக்கு முன்பாக பிளவு உண்டாயிற்று. சகோதரர் ப்ரௌன் அவர்களே, அது சரியென்று நினைக்கிறேன். நசரேயர்கள் சிறு குழந்தைகள் ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்ளாததால், அதுவே மெத்தோடிஸ்டுகளையும் நசரேயர்களையும் பிரித்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இக்கூடாரத்தில் உள்ள நமக்கோ, வேதத்தோடு நாம் நிலைத்திருப்போம் என்ற நிலையை எடுத்துக்கொள்வோமானால், வேதத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிறு குழந்தையோ அல்லது வயது வந்தவர் எவருமோ தெளிப்பு ஞானஸ்நானம் பெறவில்லை என்றுதான் காண்கிறோம். சிறு குழந்தைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வேதத்தின் ஒரே பகுதியில், “...சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும் படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களை சீஷர்கள் அதட்டினார்கள்; இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு தடை பண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து...” என்று வாசிக்கிறோம். -மத் 19:13,14 மாற் 10:14 லூக் 18:16 18எனவே, இப்பொழுது இந்தப் பிள்ளைகள் மேல் கைகளை வைக்கும்படி கர்த்தராகிய இயேசுவின் கரங்களின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள, நானோ அல்லது நமது போதகரோ அல்லது வேறு எந்த போதகரோ தகுதியுள்ளவர்களல்ல. ஆண்டவர் இன்று காலையில் இங்கு இருப்பாராயின், இந்த பெற்றோர் சிறு குழந்தையை கிறிஸ்துவிடமே கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், இங்கு நாம் அவரை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இருக்கிற படியால், அவருடைய பிரதிநிதிகளாக இருக்கும் நம்மிடம் கொண்டு வருகிறார்கள். நாம் அவர்களை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். அவருடைய மகத்தான வார்த்தை, மற்றும் அவரது மகத்தான செயலை நினைவு கூறத்தக்க வகையில் குழந்தைகள் மீது கரங்களை வைத்து அப்படிச் செய்கிறோம். ஆகவே, அவ்விதமாகத் தான் நாம் சிறு பிள்ளைகளை பிரதிஷ்டை செய்கிறோம். கர்த்தருக்கென்று தன் குழந்தையை இது வரையிலும் பிரதிஷ்டை செய்யாத, குழந்தையோடு உள்ள தாய் இங்கு இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்; தங்கள் குழந்தைகளை பிரதிஷ்டை செய்ய இருக்கும் தாய்மார் அல்லது தகப்பன்மார்களோடு தானும் அவ்வாறு செய்ய விரும்பி முன் வர அந்தத் தாய் விரும்பக் கூடும். நாம் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து தேவனிடத்தில் அவர்களை சமர்ப்பித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவருக்கு பதிலியாக நாம் நமது கரங்களை அவர்கள்மேல் வைக்கிறோம் என்று சொல்லுகிறோம். நான் இதுவரையிலும் கண்டவற்றுள் வேதத்திற்கு மிகவும் ஒத்ததாக இது இருக்கிறது. நீங்கள் ஒரு வேளை உங்களுடைய சித்தாந்தப் புத்தகத்திலிருந்து, ஏதோ ஒரு குழுவைச் சார்ந்த மனிதன், “வார்த்தை இந்தவிதமான அர்த்தத்தையுடையதாக இருக்கிறது” என்று கூறியதைக் கூறக்கூடும். ஆனால் நான் அது என்னவென்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். 19இப்பொழுது பியானோ வாசிப்பவர் (சகோதரனே! நீங்கள் தான் பியானோ வாசிப்பவரா?) இங்கு வருவாரென்றால்........ என்னுடைய சொந்த சபையிலேயே பியானோ வாசிப்பவர் யார் என்று கேட்பது விசித்திரமாக இல்லையா? (நான் ஏதோ ஒரு அந்நியன் போல் கதவைத் தட்டுகிறவனாயிருக்கிறேன்). நல்லது, குழந்தைகள் பிரதிஷ்டைக்காக கீழ்க்கண்ட பாடலை பாடுவார்கள். சபையார் இந்தப் பாடலை பாடுகையில், நாம் எழுந்து நிற்போமாக. தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்துள்ள தாய் தகப்பன்மார் இங்கே வந்து நிற்கட்டும். “பாலரைக் கொண்டுவாரீர் பாலரை இயேசுவண்டை கொண்டுவாரீர்! (சிறு குழந்தைகள் பிரதிஷ்டை —— ஆசிரியர்). 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28இப்பொழுது செய்த காரியத்தைப்பற்றி நான் சிந்தித்துப் பார்க்கிறேன். இப்பொழுது நாம் சரியாக 11 ஆம் மணி வேளையில் இருக்கிறோம். தங்கள் குழந்தைகளுடன் வந்த தாய் தகப்பன் மாரை நான் காண்கையில், கர்த்தராகிய இயேசு என்னும் குழந்தையின் பிரதிஷ்டைக்காக யோசேப்பும் மரியாளும் வந்ததை நினைத்துப் பார்க்க முடிகிறது. சகோதரன் கிட் அவர்களே! இன்று காலையில் அலுவலகத்தில் நான் ஒருவருக்கு ஒரு சிறு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது உம்முடைய வயதுடைய ஒரு மனிதனின் உணர்ச்சிமயத்தைக் கேட்டேன். சபையாரிடம் நீங்கள், கர்த்தர் எவ்வாறு உங்களை குணமாக்கினார் என்பதைப் பற்றி கூறிக் கொண்டிருந்தீர்கள் என்று கருதுகிறேன். அவர் ஒரு முதிர்ந்த ஊழியக்காரர். நான் ஒரு நாள் அவரை பார்ப்பதற்காக மிகவும் விரைந்து சென்று கொண்டிருந்தேன். 29சற்று சிந்தித்துப் பாருங்கள். தன் மனைவியோடு இங்கு இருக்கும் இந்த மனிதர், நான் பிறக்குமுன்னரே, சுவிஷேசத்தைப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தார். நிலக்கரிச் சுரங்க வேலையாட்கள் உள்ள டென்னஸி, கென்டக்கி ஆகிய இடங்களில் உள்ள மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் சென்று அவர் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார். இப்படியாக அவர் உழைத்து களைத்துப் போனார். உண்ண ஏதுமின்றியும் அவர் வாழ்ந்தார். இந்த எளிய மனைவி தன் கணவனை சுவிஷேசம் பிரசங்கிக்க அனுப்ப வேண்டி, தினமும் இருபது அல்லது முப்பது செண்டுகள் (பைசாக்கள்) துணிகளை வெளுப்பதின் மூலம் சம்பாதித்தார். இந்தத் தொகை ஒரு மனிதனை திருப்திபடுத்த போதுமானதா? அன்று அவர் அங்கு படுக்கையில் கிடந்தார். மிகச்சிறந்த டாக்டர்களும், “அவர் மரித்துக் கொண்டிருக்கிறார், மிகவும் முற்றிய புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது, சில மணி நேரங்கள் தான் அவர் உயிர் வாழமுடியும், அல்லது ஓரிரண்டு நாட்கள் தான் உயிர் வாழ முடியும்,” என்று கூறினார்கள். அது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இக்காலையில் அவர் இங்கு ஆரோக்கியத்துடனும், நலத்துடனும், தேவனுக்கு மகிமை செலுத்திக்கொண்டு இருக்கிறார். சகோதரன் கிட் அவர்களே, தாங்கள் சுகம் பெற்றபோது, உமக்கு வயது என்ன? ஆம், தேவன் அவரை சுகமாக்கிய போது, அவர் எண்பது வயதுள்ளவராக இருந்தார். தேவன் முதிர்வயதினரைக்குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? நிச்சயமாக தேவன் அக்கறைக் கொண்டிருக்கிறார். 30ஆபிரகாம் நூறு வயதினனாக இருக்கையில் தேவன் அவனை சுகமாக்கினார். சாராள் தொண்ணூறு வயதினளாக இருக்கையில் அவளை சுகமாக்கினார். அவர்கள் இஸ்ரவேலை...... இல்லை மன்னிக்கவும், ஈசாக்கை பெற்றெடுத்தார்கள். இதற்காக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் மிகவும் அருமையானவர்களாக இருக்கிறீர்கள். இப்படியாக நான் இந்தக் காலை முழுவதும் உங்களோடு பேசிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நாமோ சற்று தேவனுடைய விலையேறப்பெற்ற வார்த்தையில் கொஞ்சம் வாசித்து விட்டு, ஆராதனைக்குள் செல்வோம். கர்த்தருக்குச் சித்தமானால், சம்பவித்த சில காரியங்களைப்பற்றி நான் உங்களோடு சற்று பேசலாம் என்று எண்ணுகிறேன். அதன்பிறகு இன்றிரவில் கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் பேச விழைகிறேன். நான் வெளியே போக இருப்பதால், செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் வந்து கேட்க விரும்பினால் அப்படியே செய்யலாம். போதகர் தன்னுடைய செய்தியை கொடுத்து முடித்ததும் நான் எனது செய்தியைக் கொடுப்பேன். “அவருடைய வருகையின் மின்னும் சிவப்பு வெளிச்சம்” (உரைக்கப்பட்ட வார்த்தை , வால்யூம் 5 எண் 4 - ஆசிரியர்). அவ்வெளிச்சத்தின் மின்னுதல் எவ்வாறு நேராக நம்மேல் இப்பொழுதே அடிக்கிறது என்பதைப்பற்றி. அதைப்பற்றி இன்றிரவு பேச நான் விரும்புகிறேன். “அவர் வருகையின் மின்னும் சிவப்பு வெளிச்சம்”. அவர் இப்பொழுதே இங்கேயே இருக்கிறார். சிக்னல் (கைகாட்டி) கீழிறங்கிவிட்டது. வண்டியானது தனது தடத்தில் இருக்கிறது. 31எண்ணாகமம் 16-ம் அதிகாரத்தை நீங்கள் வாசிக்கலாம். இது நித்திய வசனமாயிருக்கிறது, எனவே அதை பயபக்தியோடு வாசிப்போமாக. நான் சொல்ல விரும்பும் பொருளின் பின்னணியை பெறும் படி அதற்காக எண்ணாகமம் 16-ம் அதிகாரம் 3, 4 ஆகிய வசனங்களை வாசிக்கும் படி விரும்புகிறேன். இப்பொழுது ஒலிநாடா பதிவுக்கருவிகள் இயக்கிவிடப்படாமலிருந்தால் அவைகள் இப்பொழுது இயக்கி விடும்படி விரும்புகிறேன். அல்லது இப்பகுதி வெளியே அனுப்ப ஏதுவாக அதற்கேற்ற வண்ணம் ஒலிப்பதிவு கருவியை பொருத்த விரும்புகிறேன். ஆராதனையில் ஏனைய பகுதியிலிருந்தும் பிரிக்கப்பட்டு தனியாக இருக்கத்தக்கதாக செய்தியின் இப்பகுதி பதிவு செய்யப்படும்படி கருவிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றனவா? இது ஒரு புதிய செய்தியாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு வேண்டிய பகுதியோடு நிறுத்திக்கொண்டு, வேண்டுவது போல் செய்து கொள்ளுங்கள். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை அறியத்தக்கதாக நான் மீண்டும் ஆரம்பிக்கட்டுமா? அல்லது எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமோ அதிலிருந்து நீங்களே உசிதம் போல் ஆரம்பித்துக் கொள்ளுங்கள். 32இப்பொழுது நாம் எண்ணாகமம் 16: 3, 4 - ஐ வாசிக்கப் போகிறோம். “மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள், சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள், கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே, இப்படியிருக்க கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். மோசே அதைக் கேட்ட போது முகங்குப்புற விழுந்தான்.“ - எண் 16:3,4 எமது பரம பிதாவே, இந்த சொற்ப வசனங்களை ஆசீர்வதியும். எங்களது இருதயத்தின் தியானமும், உதடுகளின் கனியும் உமக்கு முன்பாக பிரீதியாக இருப்பதாக. இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம், ஆமென். -சங் 19:14 நான் இக்காலையில் பேசப்போகும் பிரசங்கத்திற்கு “இடைவெளியில் நிற்றல்” என்ற தலைப்பை அளிக்க விரும்புகிறேன். 33இப்பொழுது நாம் பேசப்போகிற அல்லது வாசித்த சம்பவமானது, தாத்தான், கோராகு, ஆகியோர், “சபையார் யாவரும் பரிசுத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் இன்னின்ன காரியத்தை செய்ய நீர் விட்டு விட வேண்டும்” என்று மோசேயிடம் கூறிக்கொண்டு, மோசேக்கு கர்த்தர் கொடுத்த அதிகாரத்தில் வீணாக தலையிடத் தீர்மானித்த சமயத்தில் ஏற்பட்ட சம்பவத்தைத்தான் நாம் இப்பொழுது வாசித்தோம். அதைப் பற்றிப் பேசப் போகிறேன். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு ஜனங்களை நடத்திச் செல்லும்படி மோசேக்கு தேவன் கட்டளையிட்டிருந்தார். “நீ மிதமிஞ்சிப் போகிறாய், இக்கூட்டத்திலேயே நீ ஒருவன்தான் எதுவும் பேசவும், சொல்லவும் தகுதியுடையவன் போல் உன்னை ஆக்கிக்கொள்ள முயற்சி செய்கிறாய்” என்று அவர்கள் மோசேயிடம் கூறினார்கள். இக்காரியம் தேவனை மிகவும் கோபமூட்டியது. அதினால் அவர் மோசேயிடம், “நீ அவர்களை விட்டு பிரிந்துவிடு. அவர்கள் யாவரையும் அதமாக்குவேன். நான் உன்னிலிருந்து புதிய சந்ததியை ஆரம்பிப்பேன்” என்று கூறக்கூடிய அளவுக்கு ஆகிவிட்டது. மோசேயோ, தேவ சமூகத்தில் வீழ்ந்து, தேவன் தன்னைத் தாண்டித் தான் போக வேண்டும் என்று கூறினான். பார்த்தீர்களா? - எண் 16:21 34நாம் தொடர்ந்து தவறாகப் போய்க் கொண்டிருப்பதால், நம்முடைய பாவங்களினால் தேவன் தாம் பரியாசம் பண்ணப்படுவதினால் இளைப்படைந்து, அப்படிப்பட்ட வேளையில், ஜனங்களை அதம் பண்ணப்போகும் போது, மோசேயைப் போல் ஜனங்களுக்காக இன்று யார் நிற்கப் போகிறார்கள்? ஜனங்களுக்காக மோசே இடைவெளியில் நின்றபோது அதை தேவன் ஏற்றுக்கொண்டது போல், இன்று ஜனங்களுக்காக இடைவெளியில் நிற்கவும், அதைத் தேவன் ஏற்றுக்கொள்ளவும் தக்கதான புருஷன் யார் இருக்கிறார்? தேவ கோபத்தையே தடை செய்து நிறுத்தும் அளவுக்கு, மோசேயின் ஜீவனானது தேவனுக்கு மிகவும் விசேஷித்ததாயிருந்தது. தேவன் மோசேயைத் தாண்டிப் போய்விடமாட்டார். வேதவாக்கியத்திலிருந்து இக்காரியத்தைப் பற்றிய வெளிப்பாடு எனக்கு ஒரு நாள் கிடைக்கும் வரைக்கும் இது ஒரு பெரும் புதிராகவே இருந்தது. மோசேயானவன் எல்லாவிதத்திலும் தன் செயலில் இன்னொருவருக்கு சாயலாக, பதிலீடாக காட்சியளித்தான். அவன் இயேசுகிறிஸ்துவின் சாயலாக இருந்தான். 35பாவிகள் யாவரும் மரணாக்கினைக்கு உள்ளாகி, தேவன் முழு உலகத்தினரின் ஜீவனை அழிக்கவிருந்த போது, கிறிஸ்து நம் யாவருக்காகவும் மரித்தார். கிறிஸ்து தமது சொந்தக் குமாரனான படியால், அவரைத் தாண்டிக் கொண்டு (அல்லது மீறிக்கொண்டு) தேவனால் வரமுடியவில்லை . இயேசு தம்மையே இலவசமாக தந்தளித்து, அதன் மூலம் உரிய கிரயத்தைச் செலுத்தினார். மோசேயினால் அப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடிந்திருக்கவில்லை. மோசேக்கோ நம்மைப் போல் மனித இரத்தம் தான் இருந்தது. எனவே, அவனது இரத்தம் போதுமானதாக இருக்கவில்லை . ஆனால் இயேசுவோ தேவனுடைய சொந்த இரத்தமான, சிருஷ்டிக்கும் சக்தி வாய்ந்ததான, தேவ இரத்தமாக இருந்தார். எனவே, தேவன் முழு மனித இனத்தையும் அதின் பாவத்தினின்றும் விடுவித்து விட்டார். ஏனெனில் அவையாவும் அவர் மேல் சுமத்தப்பட்டிருந்தன. அவர் தேவ சமுகத்தை விட்டு புறம்பாக கல்வாரிக்குச் சென்று பாடுபட்டு மரித்தார். நமது பாவங்கள் அவர்மேல் இருந்தபடியால், அவர் பாவமானார். அதனால் அவர் பாதாளத்தில் தள்ளப்பட்டார். நமது பாரம் சுமப்பவர், நம்முடைய பாவங்களை தம் மேல் எடுத்துக் கொண்டு கல்வாரிக்குப் போனார். கல்வாரியிலிருந்து அவர் பாதாளத்திற்குச் சென்றார். தேவன் அவரை மூன்றாம் நாளில், நமது பாவ பிராயச்சித்தத்திற்காக எழுப்பினார். 36இன்று, இயேசுவே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மத்தியஸ்தராயிருக்கிறார். நாம் இலவசமாக மன்னிக்கப் பட்டிருக்கிறோம். நாம் பாவம் செய்தோமா என்று கூட தேவன் அறிய மாட்டார். ஒரு பொழுதும் நினைவுகூரத்தகாதபடி மறதியின் கடலில் நம் பாவங்கள் யாவும் போடப்பட்டுவிட்டன. நாமே இக்காரியத்தை செய்ய முடியாது. ஏனெனில் நாம் முடிவுள்ளவர்கள். அவரோ முடிவற்றவர், எல்லையற்றவர். நாம் முடிவுள்ளவர்கள். ஆதலால், நாம் இன்னும் நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் நாம் அவ்வளவு பெரிதானவர்களல்ல, ஆனால் அவரோ மிகவும் பெரியவர். அதனால் நாம் எப்பொழுதாகிலும் பாவம் செய்தோமா என்பதை அவர் மறந்தே போய்விட்டார். அவருடைய சமுகத்தில் நாம் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். எவற்றிலெல்லாம் அவர் எப்படியிருந்தாரோ அவ்வாறாக நாம் இருக்கிறோம். நான் அவருடைய நீதியாகும் படி, அவர் என்னுடைய பாவமானார். நீங்கள் அவருடைய நீதியாகும்படி, அவர் உங்களுக்காகப் பாவமானார். எனவே கிறிஸ்து இயேசுவில் உங்களுடைய அறிக்கை இருக்கும் வரையிலும் தேவன் உங்களில் பாவத்தைக் காண முடியாது. -2 கொரி 5:19,20,21. 1தீமோ 2:5 37ஒரு சமயத்தில் ஒருவர் இவ்வாறு கூறினார், “அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் விசுவாசிப்பேனென்றால், நாம் மிகவும் குதூகலித்து, ஊரையே அலங்கரித்து, ஒவ்வொரு நடன சாலைக்கும் சென்று, மிகவும் உற்சாகமாக குடித்து மற்றும் பல்வேறு களிப்பான காரியங்களைச் செய்வேன். ஏனெனில்....” என்று கூறினார். “ஏன் அவ்வாறு செய்வீர்கள்” என்று கேட்டதற்கு அவர், “கிறிஸ்துவில் நீங்கள் ஏற்கனவே பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். எனவே இப்படியெல்லாம் நீங்கள் செய்தால் அதை பாதிக்காதல்லவா?“ என்று கூறினார். அதற்கு நான் கூறினேன்: “நீர் இப்படியெல்லாம் செய்வது, அதை நீர் பெறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது” என்று கூறினேன். உங்களுடைய இருதயத்தை தேவனுடைய அன்பானது இயேசுகிறிஸ்துவின் மனவுருக்கத்தில் தொடும் போது, அவரை நீங்கள் மிகவும் நேசிப்பீர்கள், அதனால், உங்கள் பாவத்தைப்போல், உலகமும் உங்களுக்கு மரித்ததாக ஆகிவிடும். அவ்வாறுதான், நீங்கள் உங்களில் பரிசுத்தாவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதை அறிகின்றீர்கள். நீங்கள் அலறி, சப்தமிட்டு, அன்னியபாஷைகளில் பேசக்கூடியதாக இருப்பதினாலோ, அல்லது வேறு எவ்விதத்தினாலோ அல்ல; பாவம் உங்களுக்கு மரித்து இருக்கும் போதும், நீங்கள் இயேசுகிறிஸ்துவில் ஜீவித்திருக்கும் போதும் மாத்திரமே அதை அறியக்கூடும். தேவனுடைய அன்பு எவ்வளவு ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது. எவ்வளவு சுத்தமாயிருக்கிறது! பார்த்தீர்களா? 38சமீபத்தில் இங்கே கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் வாழ்ந்து வந்த ஒரு மாதைக்குறித்து ஒரு ஊழியக்காரர் கூறிக் கொண்டிருந்தார். அவள் தனது இருபத்தைந்து, முப்பது ஆண்டு வயதுக் காலம் வரையிலும் நீண்ட நாட்கள் திருமணமாகாமல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் அருமையான உறுதியானதொரு கிறிஸ்துவ பெண்ணாயிருந்தாள். அதே லூயிவில்லில் நல் வாழ்க்கையினை நடத்தாத ஒரு குறிப்பிட்ட மனிதன் இருந்தான். அவன் நாட்டியங்களுக்கும், இரவு விடுதிகளுக்கும் சென்று தன் காலத்தைக் கழித்தவனாயிருந்தான். ஆனால் ஒரு நாள் அவன் தனது பாவங்களுக்கு மன்னிப்பைக் கண்டு கொண்டான். அவன் உண்மையான உறுதியானதொரு கிறிஸ்தவனாக ஆனான். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, மேற்சொன்ன அந்த இளம் கிறிஸ்தவ மாதிடம் அவன் காதல் கொண்டான். அந்தப் பெண்மணியும் அவனிடம் ஆழ்ந்த காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டார்கள். 39அவர்கள் இல்லற வாழ்க்கையை இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, அந்த மாது தன் கணவனிடம் ஒரு நாள் இவ்வாறு கூறினாள்: “என் அன்பரே, புதிதாக கிறிஸ்தவனாக ஆன உங்களுக்கு இது சற்று கடினமாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். நான் சிறு பெண்ணாக இருந்தது முதலே கிறிஸ்தவளாக இருந்திருக்கிறேன். ஆனால் இளம் கிறிஸ்தவராக இருக்கும் உங்களுக்கு, இதற்கு முன் இவ்வளவு நீண்ட காலம் நீங்கள் பாவத்தை செய்து கொண்டேயிருந்தபடியினால், பாவத்தின் வஞ்சனைகளையும், சோதனைகளையும் எதிர்த்து நிற்பதென்பது கடினமானது தான்” என்றாள். அதற்கு அவன் கூறினான்: “ஆம், அது ஒரு போராட்டமாகத் தான் இருக்கிறது” என்று. அவள் கூறினாள்: “நீங்கள் ஒரு காரியத்தை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, சத்துருவானவன் உங்களை எங்காவது நிலைகுலையச்செய்து, அதனால் நீங்கள் வீழ்ந்து பாவத்திற்குள் மீண்டும் போய்விடுவீர்களானால், அதினிமித்தம் நீங்கள் வீட்டை விட்டு நீங்கியிருக்க வேண்டாம். நீங்கள் திரும்பவும் வீட்டிற்கு வந்து விடுங்கள். நீங்கள் திருமணம் செய்து கொண்ட அதே மனைவியை நீங்கள் வீட்டில் காணலாம்.” அவள் மேலும் கூறினாள், “நீங்கள் மீண்டும் ஜெபிக்க நான் உங்களுக்கு உதவுவேன், மீண்டும் தேவனிடத்தில் திரும்புவதற்கு நான் ஜெபத்தின் மூலம் உங்களுக்கு உதவுவேன். எனவே நீங்கள் தூரமாகபோய்விட நான் விரும்பவில்லை . நீங்கள் எப்படியிருந்தீர்கள் என்ற அடிப்படையின் பேரில் நான் உங்களை மணக்கவில்லை.நான் உங்களை நேசித்தபடியினால் மணந்து கொண்டேன். நீங்கள் என்ன செய்தபோதிலும், நான் இன்னும் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களில் அன்புகூர்ந்தபடியினால் தான் உங்களை மணந்து கொண்டேன்” என்று கூறினாள். 40அந்த மனிதன் அந்நாளில் தன் வேலைக்குச் சென்ற பொழுது, தான் வேலை செய்கிற இடத்தில் இக்காரியங்களை பற்றி பிரஸ்தாபித்தது கேட்கப்பட்டது. அவன் கூறினான்: “இப்படிப்பட்டதான ஒரு பெண்ணுக்கு எதிராக ஒரு மனிதன் எவ்வாறு தவறு இழைக்க முடியும்? ஒரு மனைவி தன் கணவன் என்ன செய்த போதிலும் அவனை மிகவும் நேசித்து, அவன் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று விரும்புவதும், அவனை திரும்பவும் ஏற்றுக்கொள்ள விரும்புவதும், இவ்வாறு மீண்டும் செய்ய முயற்சிப்பதுமான ஒரு காரியத்தை ஒரு பெண் செய்தால் அவளுக்கு எதிராக அவன் எப்படி தவறான எந்த ஒன்றையும் செய்ய முடியும்?” பாருங்கள். இந்த பெண்ணுக்குள்ள இந்த அன்பை பல கோடி எண்களால் பெருக்கிப் பாருங்கள். அப்பொழுது தேவனுடைய அன்பு எப்படிப்பட்டது என்பதைப்பற்றிய ஒரு அபிப்பிராயம் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவிடம் அன்பு கூறும்போது, உலகத்தின் காரியங்கள்... அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதைப்பற்றி வேதத்தின் வெளிச்சத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்கையில் — ஏதோ சில மனக்கிளர்ச்சியின் வெளிச்சத்தில் அல்ல — அது என்ன என்பதைப் பற்றிய உண்மையின் வெளிச்சத்தில் பார்க்கையில், அப்பொழுது உங்களுக்கு ஏதோ நேரிடுகிறது. அவ்வமயம் புதிய பிறப்பை நீங்கள் அடைகிறீர்கள். பாவமானது அப்பொழுது நடு இரவைப்போல் மரித்ததாக இருக்கிறது. ஒளி உங்களிலிருக்கும் வரைக்கும், இருள் எவ்வாறு உங்களில் ஊடுருவும்? அவ்வாறு ஆக முடியாது. வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு தன்னையே இடைவெளியில் சமர்ப்பித்த ஒரு மனிதனுக்கு தேவன் அதைத்தான் செய்தார். மோசேயானவன் அந்த முந்தின சாயலுக்கு சாயலாயிருக்கிறான். எனவே தான் அவன் ஜனங்களுக்காக இடைவெளியில் நின்றான். 41பின்பு நான், நாம் வாழும் இந்த தளர்ந்த நடையுள்ள, சோம்பேறிதனமான, உறுதியில்லாத லவோதிக்கேயா காலத்தைப் பற்றி இந்நாளில் வியந்தேன். சபைக் காலங்களைப்பற்றி படிக்கையில், கடைசிக் காலமாகிய லவோதிக்கேயா சபைக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் அறிந்திருக்கிறோம். இந்த சோம்பேறித்தனமான, தளர்ந்த நடையுள்ள, நிர்விசாரமுள்ள, பரியாசம் பண்ணிக்கொண்டிருக்கிற, இச்சையினால் நிறைந்த, பாவ காலமாகிய நாம் வாழ்கிற இந்தக் காலத்தில், தேவனானவர், “சபையே கொஞ்சம் விலகி நில், இந்த முழு உலகத்தையும் நான் அதமாக்குவேன்” என்று இன்னமும் சொல்லாதது வியப்பாக இருக்கிறது. நாம் வாழ்கிற இந்தக் காலம் எத்தகையது என்பதைப் பாருங்கள். அக்காரியத்தை இந்நாட்களிலொன்றில் அவர் செய்தும் விடுவார். அது வருகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அப்பொழுது இதற்கு எதுவும் தப்ப முடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே... தப்பித்துக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒருவர் மரித்து விட்டார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக ஆனவர்களை அவர் எடுத்துக் கொள்வார். அவர்கள் கோபத்தினின்று விடுவிக்கப்படுவார்கள். ஏனெனில் அப்பொழுது அவரால் அதைச் செய்ய முடியாது. மோசேயின் காலத்தில் அதைச் செய்வதற்கு ஒரு வழியும் இல்லை . 42வெளிப்படுத்தின விசேஷத்தில் மூன்றாம் அதிகாரத்தில் வேதம் கூறுவது என்னவெனில், லவோதிக்கேயா சபைக்காலமாகிய இக்காலம் குருடாயிருக்கும் என்று கூறுகிறது. “நீங்கள் ஐசுவரியமுள்ளவர்களாயிருக்கிறபடியினால், ஐசுவரியம் உடையவர்களாயிருக்கிறோம் என்றும், திரவிய சம்பன்னரென்றும் கூறுகிறபடியினால்...'' (பெரிய சபைக் கட்டிடங்கள், அருமையாக உடுத்தியிருக்கும் மக்கள், எந்த ஒரு காலத்திலும் இல்லாத அளவுக்கு மகத்தான காரியங்கள்), “எனக்கு ஒரு குறைவுமில்லையென்று கூறுகிறாய். ஆனாலோ நீ உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், பரிதபிக்கப்படத்தக்கவனும், நிர்பாக்கியமுள்ளவனும், நிர்வாணியும், குருடனுமாயிருக்கிறதை அறியாதிருக்கிறாய்.” இருக்கிறாய்.“ வெளி 3:17 ஒருவன் புத்தி சுவாதீனமுள்ளவனாயிருந்தால், அவனிடம் அவனுடைய குறைபாடுகளை நீங்கள் எடுத்துரைக்கலாம். அப்பொழுது அவன் தன்னை சீர் செய்து கொள்ள முயலுவான். ஆனால், அந்த மனிதன் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருக்கும் போது, உங்களால் அவனிடம் அவனுடைய காரியங்களை எடுத்துரைக்க இயலாவிடில்... அவன் தான் நிர்வாணியாயிருந்தும், அதை எடுத்துரைக்கும் போது, அதை விசுவாசிக்காவிட்டால், தான் இன்ன நிலையிலிருக்கிறோம் என்பதை விசுவாசிக்க அவனால் முடியவில்லை என்பது அவன் குருடாயிருக்கிறான் என்பதையே காட்டுகிறது. கிறிஸ்துவை சேவிக்க மறுப்பவர்களின் கண்களை இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் குருடாக்கிவிட்டான். நாம் வாழ்கிற இந்தக் காலத்தின் நேரத்தின் அடையாளத்தை அவர்களால் காண இயலாதபடி, அவர்கள் மிகவும் குருடாயிருக்கிறார்கள். இடைவெளியில் ஏற்கெனவே ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே வேறு ஒருவரும் நிற்க முடியாது. நீங்கள் அந்த பரிகாரத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையெனில் நீங்கள் நாசமடைவீர்கள். 43இப்பொழுது முடிக்குமுன்னர், நான் சொல்ல விரும்புவது யாதெனில்: செங்குத்தான மலையுச்சியின் மேல் ஒரு குருடான மனிதன் நடந்து செல்லும்போது, அதை நின்று பார்த்துவிட்டு, அவனை அதைப்பற்றி எச்சரியாமல் இருக்க நம்மால் முடியுமா? (இதை நான் எனக்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்). அவ்வாறு செய்யாமலிருந்தால் மிகவும் கொடுமையானதாக இருக்கும். நமது இருதயத்தில் நாம் மிகவும் அக்கறையற்றவர்களாக இருப்போம். (பார்க்க முடியாதவனும், தனக்குத் தானே உதவி செய்துகொள்ள இயலாதவனுமாகிய) ஒரு குருடன் செங்குத்தானதொரு மலையுச்சியின் மேல் நடந்து செல்கையில், வேறொரு மனிதன் அதைப் பார்த்தும் அதைப்பற்றி அக்கறையில்லாமலும், மேற்கொண்டு நகைக்கக் கூடியவனான ஒரு மனிதனைப் பற்றி உங்களால் கற்பனை பண்ணி பார்க்க முடியுமா? அதைப்பற்றி எதுவும் செய்யாமல் இருப்பது மோசமானதாகும். 44நல்லது, உலகமுழுவதிலும் உள்ள எனது சகோதரர்களுக்கு நான் இவ்வறிக்கையை விடுக்க விரும்புகிறேன். நான் மனத் தாழ்மையோடு, நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்றும், என்ன செய்யப்போகிறதாக எண்ணியுள்ளேனோ அதையும் பற்றி கூறப் போகிறேன். அநேக ஆண்டுகளாக நான் பிரசங்கித்து வந்திருக்கிறேன். நான் வயது சென்ற மனிதனாக, முதிர்ந்த பிரசங்கியாக ஆகி விட்டேன். ஏராளமான கடுமையான போராட்டங்கள் எனக்கு ஏற்பட்டது. நான் கலங்கினவனாக இருக்கிறேன். என் உள்ளே முழுவதும் போராட்டங்களினால் வெட்டுண்டு போயிருக்கிறேன். ஏனெனில், தேவன் எனக்கு அளித்த பங்கு, குழந்தைகளை முத்தமிடுவது, இளைஞருக்கு விவாகம் செய்து வைப்பது, முதிர்வயதினரை அடக்கம் செய்வது போன்றதல்ல. ஆனால் அஞ்ஞான மார்க்கத்தின் வஞ்சனைகள், பேய்களின் உபதேசங்கள், மற்றும் அந்தகாரத்தின் வல்லமைகள் ஆகியவற்றுக்கு எதிரான யுத்தத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, எதிராளியானவன் தோற்கடிக்கப்படுவதை நான் காணும் வரையிலும் போரிடுவதே என் பங்காகும். 45இந்நாளில் இச்செய்தியோடு நான் வந்த வேளையில், நான் சபைக்கு சொல்லவிருந்ததை சொல்லிவிட்டேன். இந்த வேலைக்காக பரிசுத்த ஆவியானவர் என்னை அழைத்த பொழுது, நான் முன்னறிவித்தேன். உங்களுக்கு நான் உரைக்கும்படி கர்த்தர் அனுமதித்த காரியங்கள் ஒவ்வொன்றும், அது எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறே நிறைவேறியிருக்கிறதேயல்லாமல் வேறில்லை. இதை மறுத்துரைக்க இன்று இவ்வுலகில் ஒருவரும் இல்லை . அவர் எவ்வாறு என்னை முதலாவதான வரத்தோடு முதலில் அனுப்பினார், பிறகு இரண்டாவது வரம்... உலக முழுவதிலும் காரியங்கள் உரைக்கப்பட்டன அல்லது நடந்தேறியுள்ளன, மேலும் உண்மையாக லட்சக்கணக்கானவர்கள் கிறிஸ்துவினிடம் வந்திருக்கின்றனர். பத்தாயிரக்கணக்கான பிரசங்கிமார்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, அதனால் இன்றைய தினத்தில் ஒரு எழுப்புதலானது ஆரம்பிக்கப்பட்டு, அது பூமி முழுவதிலும் பரம்பிக்கொண்டு இருக்கிறது. பெந்தேகோஸ்தேயினர் ஒருவரே என்னுடைய செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால் அவர்களே அபிவிருத்தியடைந்துள்ளனர். சிறு குழுக்களாலான பெந்தேகோஸ்தேயினரே, மற்ற எல்லா சபைகளையும் ஒன்றாக சேர்த்தாலும் அவர்களால் காண்பிக்க முடியாத அளவுக்கு, அதிகமாக மக்களை மனமாற்றமடைய செய்திருக்கின்றனர். அது புள்ளி விவரமாயிருக்கிறது. ஏன்? ஏனெனில் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுதலினாலும், எழுப்புதலை ஏற்றுக் கொள்வதினாலுமேயாகும். 46நாமும், வைத்தியர்களும், பூமியின் பெரிய மனிதரும் சாட்சியிட்டதான, வியாதியஸ்தர் சொஸ்தமடைதல், பிசாசுகள் துரத்தப்படுதல், மரித்தோர் உயிரோடெழுப்புதல் ஆகியவைகள் நடைபெற்ற மகத்தான வேளைக்குள் வந்ததற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு நம்மிடையே தோன்றுவது நேரிட்டது. அது சுவற்றில் கையுறுப்புதோன்றி எழுதுதலாகிய அடையாளத்தோடு தோன்றினது. அது கர்த்தருடைய தூதனால் ஏற்பட்டதாகும். இப்பொழுது விஞ்ஞானிகள் அதை தங்களது பதிப்புரிமை ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது உலகம் முழுவதிலும் அறியப்பட்ட உண்மையாயிருக்கிறது. அவர் செய்த காரியங்கள் யாவையும், நீங்கள் கண்டீர்கள். அவை ஒவ்வொரு வேளையிலும் நிறைவேறியுள்ளன. மோசேயின் நாட்களில் வனாந்தரத்தில் இஸ்ரவேலரோடு அக்கினி ஸ்தம்பம் கூடவே சென்றது. அந்த அக்கினி ஸ்தம்பத்தை நாம் கண்டோம். “கர்த்தருடைய ஊழியக்காரன் ” என்றழைக்கப்பட்ட மோசே இரவில் அக்னிஸ்தம்பத்தையும், பகலில் மேகஸ்தம்பத்தையும் பின் தொடர்ந்தான். 47இயேசு இப்பூமியில் இருந்தபோது, அவர் தாமே அந்த தேவன் என்று கூறினார். “ஆபிரகாமுக்கு முன்பே நான் இருக்கிறேன்” (I AM) என்று அவர் கூறினார். “இருக்கிறேன்” (I AM) என்று சொன்னவர்தான் முன் காலத்தில் மோசேயோடு முட்செடியிலிருந்து அக்னிஸ்தம்பமாகத் தோன்றி பேசியவர். சகோதரன் வேய்ல் அவர்களே! அது சரியானது என்று நான் நினைக்கிறேன். “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். அவரிடத்திற்கு திரும்பிச் செல்கிறேன்” என்று அவர் கூறினார். அவர் சிலுவையிலறையப்பட்டு மரித்து உயிரோடெழும்பி உன்னதத்திற்கு ஏறி, தமது சரீரத்தை நித்திய தேவனின் பலிபீடத்தின் மேல் கிடத்தினார். அவர் அங்கே நமது ஸ்தானத்தில் கிரியை செய்யும்படியும், நமது பாவக்கடனை செலுத்தித் தீர்த்துவிட்டார் என்று அறியத்தக்கதாக சதாகாலமும் அவர் பிரசன்னமாயிருக்கிறார். அங்கிருந்து அவர் அக்னி ஸ்தம்ப ரூபத்தில் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். - யோ 8:42,58 48பரிசுத்த பவுல் - அவன் பரிசுத்த பவுல் என்று அழைக்கப்படுமுன் தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்றே அழைக்கப்பட்டான். ஒரு நாள் அவன், தங்களது சபைகளின் பாரம்பரியத்திற்கு முரண்பாடானதொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டு சப்தமிட்டுக்கொண்டிருக்கிற சில மக்களை கைது செய்யும்படி தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தான். அவனது வழியில், பகலின் இவ்வேளையில், மகத்தானதொரு ஒளி அவனை அடித்தது. அவன் யூதனானபடியால், இஸ்ரவேலரை வனாந்திரத்தில் நடத்திய அக்னி ஸ்தம்பத்தைப் பற்றி அவன் அறிந்திருந்தான். எனவே அந்த ஒளி அவனை அடித்த பொழுது, தன் முன் தோன்றிய அந்த அக்னி ஸ்தம்பத்தைக் கண்டு அவன், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்டான். -அப் 9:5 உங்களுடைய 'கிங் ஜேம்ஸ்' மொழிபெயர்ப்பு ஆங்கில வேதாகமத்திலும், 'ஸ்டாண்டர்ட்' மொழிபெயர்ப்பு வேதாகமத்திலும் நீங்கள் கவனிக்கலாம். அவற்றில் ஆங்கிலத்தில் 'L-O-R-D' (கர்த்தர்) என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தங்களுடைய வேதாகமத்தை அறிந்தவர்கள், பெரிய எழுத்துக்களில் 'L-0-R-D' (கர்த்தர்) என்று குறிப்பிட்டிருந்தால் அது 'ஏலோஹிம்' - ஐக் குறிக்கும் என்பதை அறிவர். ஆதியாகமம் 1:1ல் கூறப்பட்டுள்ள வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சர்வசக்தனாகிய தேவன் அவர்-கர்த்தர் (LORD) பவுல் பார்வையில் தென்படுகிறதொரு மாயமான தோற்றத்தை இவ்வாறு அழைத்திருக்க மாட்டான். ஏனெனில் அவன் வேதவாக்கியங்களில் பயிற்றுவிக்கப்பட்டவன். அந்த நாளின் பெரிய போதகராகிய கமாலியேலின் கீழ் கல்வி பயின்றவன். அவ்வொளி யேகோவாதான் என்று தான் திருப்தியடையாமல் அவரை 'ஆண்டவர்' (LORD) என்று அவன் அழைத்திருக்க மாட்டான். “ஆண்டவரே (LORD) நீர் யார்” என்று அவன் கேட்டான். -ஆதி 1:1 அப் 9:5 49பதிலாக வந்த அந்த சப்தத்தைக் கேளுங்கள்; “இயேசு நானே”. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். -அப் 9:5 எபி 13:8 எனவே, இவையெல்லாவற்றின் மத்தியிலும், தொடர்ந்து செல்லும் முன்பும், இங்கும், உலகமுழுவதிலும் இப்பொழுது இச்செய்தியினை செவிமடுத்துக் கொண்டிருக்கும் யாவரும் இது நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து தான் என்பது ஒவ்வொரு செய்கையினாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவார்கள் என்று எண்ணுகிறேன். அவர் முன்பு செய்த அதே காரியங்களை இப்பொழுதும் செய்துவருகிறார். வியாதியஸ்தரை குணமாக்குகிறார். இருதயத்தின் சிந்தைகளை அறிந்தார்; நடக்கப் போகிறவைகளை முன் கூட்டியே காண்பித்தார்; இத்தனை ஆண்டுகளிலும் ஒவ்வொரு வேளையிலும் அவை பரிபூரணமாக நிறைவேறியுள்ளது. நான் இப்பொழுது 54 வயதினனாக இருக்கிறேன். என்னுடைய 18 மாத பிராயத்திலிருந்து நான் தரிசனங்களைக் கண்டு வருகிறேன். அவைகள் ஒரு போதும் தவறியதில்லை . ஆனால் ஒவ்வொரு தடவையிலும் அது சத்தியமாகவே இருந்திருக்கிறது. எனவே அது தேவனாகத்தானிருக்க வேண்டும். அப்படியானால் மக்கள் அதைக் காணக் கூடாதபடி ஏன் குருடாயிருக்கிறார்கள் என்று சிந்திக்கிறேன். - எபி 13:8 50நான் அடிக்கடி நம்முடைய ஸ்திரீகளிடத்தில் அவர்களுடைய தலைமுடியை கத்தரித்துக் கொள்ளுதலைக்குறித்தும் அவர்களது ஒழுக்கக் குறைவான குட்டைப் பாவாடைகள் முதலான ஆடையணிதலைக் குறித்தும் பேசுகிறேன். அதைக் குறித்து ஏனைய ஊழியக்காரர்கள் எனக்கெதிராக கூக்குரலிடுகிறார்கள். பெண்களோ தங்களது இவ்விதமான கிரியைகளில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆண்கள், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு, தாங்கள் ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதினால், அங்குள்ள மேசைகளில் திருவிருந்து ஆராதனைகளில் பங்கெடுக்கிறார்கள். இவையெல்லாவற்றோடுங்கூட, அவர்கள் புகைப் பிடிப்பதிலும், சமுதாயக் குழுக்களில் மது அருந்துவதும், மற்றும் இன்ன பிற ஒழுங்கினங்களையும் செய்து கொண்டிருப்பவற்றைக் குறித்தும் நான் அடிக்கடி பேசுகிறேன். ஓ, அது அவர்களுக்கு இலேசாக இருக்கிறது. இவற்றைக்குறித்து நான் பேசுவதினால், நான் தேவதூஷணம் செய்கிறேன் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இதனால் தங்கள் ஸ்திரிகள் சீர் பொருந்தியிருக்கப் பெற்றிருக்கிறார்களா? இல்லை. அவர்கள் நாடு பூராவும் இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கிறார்கள். பின்பு, நான் சற்று பயந்தசுபாவமுள்ளவனாய் இருந்தபடியால், இந்த வேலைக்கு நான் தகுதியற்றவன் என்று ஆரம்பத்தில் நான் அறிந்திருந்தபடியால், அநேகர் இதே போல் என்னைக்குறை கூறிய பிரகாரம், அது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் நான் நினைத்தேன், “தேவனே, இந்த வேலையை செய்யக்கூடியவராகிய இன்னொருவரை ஏன் நீர் அழைக்கவில்லை? நான் தோல்வியுறுகிறேன் என்று வருந்துகிறேன். மக்கள் எனக்கு செவிகொடுக்க மாட்டார்கள். அவர்கள் செவிகொடாதபடியினால், நான் செய்ய வேண்டியதை செய்யாமல் எங்கோ தவறிவிட்டேன்.” 51சுமார் ஓராண்டு முன்பு எனது தாயார் மகிமைக்குள் கடந்த சென்று விட்டார்கள். அவர்கள் தகப்பனார் ஒரு வேட்டைக்காரர். நானும் அவரைப் போல் காடுகளை மிகவும் நேசிக்கிற படியினால், இந்தத் தன்மைகளையெல்லாம் நான் அவரிடத்திலிருந்தே பெற்றுள்ளேன் என்று கருதுகிறேன். “கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த ஜனங்கள் நான் பிரசங்கிக்கும் இந்த செய்திக்கு செவிகொடுக்க விரும்பவில்லையெனில், அவர்கள் போகட்டும். நானும் இதை ஒரேயடியாக நிறுத்திவிட்டு மலைக்குப் போய்விடப் போகிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார், அங்கே...” என்று நான் எண்ணினேன். இங்குள்ள உங்களில் அநேகருக்கு நான் இதே பிரசங்க பீடத்திலிருந்து ஒரு சம்பவம் நடந்த ஆறு மாதகாலத்திற்கு முன்பாக அதைப்பற்றி முன்னுரைத்தேன் என்பதை நினைவு கூருவீர்கள். அதில், எவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வேன் என்பதையும், அங்கே மானைப் போல் காட்சியளிக்கும் ஒரு மிருகம் இருக்கும் என்றும், அதற்கு கூர்மையான கொம்புகள் இருக்குமென்றும், அக்கொம்புகள் 42 அங்குலங்கள் இருக்குமென்றும், எவ்வாறு அங்கு ஒரு வெள்ளிமுலாம் பூசப்பட்டதுபோல இருக்கும் 7 அடி நீள கரடி இருக்குமென்றும் கூறியிருந்தேன். அவையெல்லாவற்றையும் நீங்கள் டேப்புகளில் பெற்றிருக்கிறீர்கள். அந்த நேரத்தை நீங்கள் நினைவு கூருகிறீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். அது உண்மையென்று காண்பிக்கும்படி அவை எனது அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன. 52எனது தாய் இவ்வுலகைவிட்டு போகு முன்பு நடந்தவைகள் இவைகள், ஆண்டவர் எனது தாயை எடுத்துக் கொள்வதைக் குறித்து அறிந்திருந்தபடியால், அச்சம்பவம் நடக்கும் போது எனக்கு ஏற்படும் அதிர்ச்சியினின்றும் என்னை சாந்தப்படுத்தும் படி தேவன் விரும்பினார். அலாஸ்காவில் ஒரு பெரிய தேசத்தையுடையவனாகிய ஒரு கிறிஸ்தவ மனிதரை நான் சந்தித்தேன். இங்கிருந்து கிளம்பி மேற்கில் நான் சென்றுவிட்ட படியினால், அங்கு என் மனைவியை அழைத்துச் சென்று முயல் போன்ற மிருகங்களைப் பிடிப்பவளாக ஆக்கி விடுவேன் என்றும், நான் ஒரு வழிகாட்டி (Guide) ஆகி விட வேண்டுமென்றும் மனதில் தீர்மானித்தேன். அதற்குப் பிறகுநான் ஏதாவது செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்பினால்.... என்னுடைய முடியை நீளமாக வளரவிட்டு, கன்ன மீசையையும் வளர விட்டு அங்கே சென்று ஒரு வழிகாட்டி (Guide) ஆகி விடுவேன். அந்நாட்டில் இரண்டு அல்லது மூன்று இந்தியர்கள் தான் வாழ்கின்றனர். நான் ஒரு வழிகாட்டியாக ஆகி, பட் (Bud)க்கு உதவி செய்யலாம் என எண்ணினேன். நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினால், அப்பொழுது, “சரி ஆண்டவரே” என்பேன். அவர் எனக்கு ஒரு தரிசனம் தருவார். பிறகு நான் கிளம்பிச் செல்வேன் என்று எண்ணினேன். 53நான் இதை ஜனங்களுக்குச் சொல்கிறேன்; நான் ஒருபோதும் என்னைக்குறித்து பெரிதாக எண்ணிக் கொள்ளவில்லை. இதைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும். ஆனால் மக்கள் என்னிடம், “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக இருக்கும்படி கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார்” என்கிறார்கள். ஆனால் நான் என்னை ஒருபோதும் அந்த விதமாக எண்ணவில்லை. ஆனால் நான் அந்த வேலையைச் செய்ய ஆயத்தமாக இருக்கும் வேளைக்கு நெருங்க ஆரம்பிக்கும்போது, “நல்லது, ஒரு வேளை நான் அப்படியிருக்கலாம், அப்படி இருந்தால், நான் வனாந்திரத்தில் வாழ்ந்து கொண்டு, அவருடைய தீர்க்கதரிசியாக இருப்பேன்” என்றேன். பார்த்தீர்களா? அப்பொழுது என்னை அவர் எங்காவது அனுப்ப விரும்பினால்... அவர் என்னை உபயோகிக்காத நேரத்தில் அருமையான சில மீன்களைப் பிடிப்பதில் நான் ஈடுபடுவேன். நான் இப்படிச் செய்ய நினைப்பது, நிச்சயமாக ஒரு விதத்தில் சுயநலமான மனோபாவம்தான். செய்ய வேண்டிய தான காரியம் சரியாக அதுவல்ல. இப்பொழுது, நான் அதைச் செய்ய என் மனதில் தீர்மானித்துள்ளேன். ஏழுசபைக் காலங்களைக் குறித்து பிரசங்கிக்கும் முன்னர் - அதே நேரத்தில் எவ்வாறு கர்த்தர் அதை ஆசீர்வதித்து ஏழு சபை காலங்களைக் குறித்து வரையப்பட்டவைகளை அவர் சுவற்றில் அப்படியே வரைந்து பிரதிபலித்துக் காட்டினாரோ, அந்நேரத்தில் அங்கிருப்பவர்களில் அநேகர் பிரசன்னமாயிருந்து அறிந்திருந்தார்கள். அன்று ஆண்டவர் இங்கு வந்தபொழுது இங்கே உங்களில் எத்தனை பேர் இங்கேயிருந்தீர்கள்? 54சகோதரன் ஜாக்ஸனை நினைவு கூருகிறேன். அவர் வழக்கமாக நம் மத்தியில் இருப்பவர். சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் முன்பு மெத்தோடிஸ்டு ஊழியக்காரராக இருந்தார். இப்பொழுது அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். அவர் என்னிடம் ஒரு சொப்பனத்துடன் வந்தார். இன்னும் சில சகோதரரும், ஜாக்ஸனுடைய சொப்பனத்திற்கு ஒத்த சொப்பனங்களுடன் வந்தனர். கர்த்தர் எனக்கு மிகவும் நல்லவராக இருந்திருக்கிறார். ஆனால் நான் ஒரு பொழுதும் சொப்பனங்களுக்கு தவறான வியாக்கியானத்தைக் கொடுத்ததில்லை. (இதை நீங்கள் இக்காலையில் பதிவு செய்து கொள்ளுங்கள்) எந்த ஒரு சொப்பனத்திற்கும் நான் எப்பொழுதாவது தவறானதொரு வியாக்கியானத்தைக் கொடுத்ததுண்டா? இல்லை ஐயா! ஏனெனில் கர்த்தர், குறிப்பிட்டவர் கண்ட சொப்பனத்தை எனக்கு தரிசனத்தில் மீண்டும் காண்பித்து, அது என்னவென்று எனக்குச் சொல்லும் வரை, நான் அதைப் பற்றி பேசவே மாட்டேன். பின்பு சகோதரன் ஜாக்ஸன் கூறினார். நான் அவருடைய சபையில் ஒரு ஆராதனையை நடத்திக் கொண்டிருந்தேன். அந்த இராத்திரியில் அவர் எவ்வாறோ சற்று அதிர்ச்சியடைந்தவராக இருந்திருக்கிறார். அவர் தமது சபைக்கட்டிடத்தை விட்டு வெளியேறி வேறு வழியாக வந்து, காரில் இருந்த என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது மக்கள் கடந்து சென்று கொண்டிருந்தனர். என்னிடம் வந்து, “நான் உங்களிடம் ஒரு காரியம் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறினார். 55தான் ஒரு சொப்பனத்தைக் கண்டதாக அவர் என்னிடம் கூறினார். அச்சொப்பனத்தில் அவர் கண்டதாவது: இந்தியானாவைப்போல் இங்கே ஏதோ ஒரு இடம், அங்கே நீண்ட பெரிய புல் நிறைந்த மலை ஒன்று இருந்ததாம். அதின் உச்சியில் இருந்த மண்ணெல்லாம் மழை பெய்து நீரால் முழுவதும் கழுவி விடப்பட்டிருந்ததாம். அந்த மலையுச்சி அதனால், மொட்டையாக இருந்தது. அந்த வழுக்கையான பாறையின் மேல் ஏதோ வினோதமாக எழுதப்பட்டிருந்தது. இங்குள்ள சபையிலுள்ள எல்லா சகோதரரோடும் நின்று கொண்டு, எழுதப்பட்டவைகளை நான் வியாக்கியானித்துக் கொண்டிருந்தேனாம். எழுதப்பட்டவைகள் யாவையும் நான் வியாக்கியானித்து முடிந்த பின்பு, சொப்பனத்தை நான் சரியாக புரிந்து கொண்டிருப்பேனாயின்... நான் இவ்வாறு செய்தேனாம். நெம்புகோல் மாதிரி நெம்பக் கூடியதொரு கடப்பாறையினால் அம்மலையின் உச்சிப் பகுதியை நெம்பிப்பிளந்து திறக்கிறேனாம். அதன் உள்ளே பளிங்கு போன்ற தீட்டப்பட்ட கருங்கல்லைப் போன்ற வெண்குறிக்கல் தன்னில் எதுவும் எழுதப்படாமல் இருக்கின்றது. நான் என்னோடிருக்கிற சகோதரர்களிடம், “நீங்கள் இங்கேயே இருந்து, இதைப்பார்த்துக் கொண்டிருங்கள்” என்று கூறினேன். அவர்கள் அவ்வாறு அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில், நான் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறேன். சகோதரன் ஜாக்ஸன் கூறினதாவது: நான் ஒரு மலையின் மேல் செல்வதாகவும், பிறகு இன்னொரு மலையின் மேல் செல்வதாகவும் இவ்வாறு உருவம் மிகவும் சிறிதாகத் தெரியும் அளவுக்கு மேற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறேனாம். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 56அச்சொப்பனமானது, அது நிறைவேறுமுன்னதாக, இந்த சபையில் அதற்கான வியாக்கியானமானது கொடுக்கப்பட்டது. அந்த வேளை இப்பொழுதே வந்திருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். லுத்தர், வெஸ்லி, ஜான் ஸ்மித், அலெக்ஸாண்டர் காம்பெல் மற்றும் ஏனையோரும் வேதத்திலிருந்தே பிரசங்கித்தனர். அவர்கள் காலத்தின் வழியாக கடைசியாக வந்த நமக்கு முழு வெளிப்பாடும் கிடைக்கும்படி, அதற்காக ஏழாவதான ஒரு தூதனின் செய்தி இருக்கிறது என்பது நமக்கு காண்பிக்கப்பட்டது. ஏழாம் தூதனின் செய்தி முழங்குகையில், எல்லா தேவ இரகசியங்களும் தெரியப்படுத்தப்படும். பிறகு ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள் வருகின்றன. - வெளி 10:6 நாம் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தைப் பெறுதல் வழியாக வந்தடைந்தோம். நமக்கு அற்புத அடையாளங்கள் மற்றும் பல்வேறு காரியங்கள் நடைபெற்றுள்ளன. சபைக்கு வரங்கள் திரும்பக் கிடைத்திருக்கின்றன. அவ்வரங்கள், தெய்வீக சுகமளித்தல், தீர்க்கதரிசனம் உரைத்தல், அன்னிய பாஷைகளில் பேசுதல், அவற்றிற்கு வியாக்கியானம் கூறுதல் போன்றவைகளாகும். அன்னிய பாஷைகளில் பேசுதலானது தவறாக பயங்கரமான முறையில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனாலும் என்ன, அந்த தவறு நன்மையான ஒன்றை நீக்கிவிட முடியாது. அன்னிய பாஷைகளில் பேசுதலில் (அது அசலானது ஆகும்) உண்மையான ஒன்று எப்பொழுதும் சபையில் இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நாம் வாழ்கிற இந்தக் காலமானது கடைசிகாலமாக இருக்குமென்றால்... 57நம்மிடையே ஏராளமான போலிகள் உள்ளன. நம்மிடையே கிறிஸ்தவர்கள் போல் நடித்து காட்டும் மக்கள் உண்டு. ஆனால் அவர்களுடைய ஜீவியங்கள் அதற்கேற்றாற்போல் இல்லையாதலால் ஏதோ தவறு அவர்களிடம் இருக்கிறது. “அவர்கள் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்” என இயேசு கூறினார். ஒருவன் கிறிஸ்தவனா இல்லையா என்பதை அவன் ஜீவிக்கிறதைப் பொறுத்தே நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள். நீங்கள் ஜீவிக்கிறதற்கு மிஞ்சி உயர குதிக்க முற்பட வேண்டாம். இக்காரியம் ஒரு பிசாசாக வயல்களில் பறவைகளைத் துரத்தியடிப்பதற்காக வைக்கப்படும் பூதம் போன்ற பிரதிமைக்கு ஒப்பாக இருக்கிறது. உண்மை நிலையை அறியாதபடி உண்மையான, அசல் விசுவாசிகளை அதினின்றும் விலக்கிவைக்கும் பிசாசாக அது இருக்கிறது. நன்மை, தீமை இவற்றை பகுத்தறிந்து, வேறுபிரித்து வைப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. வார்த்தையானது அதை எப்பொழுதும் நேராக்குகிறதாயிருக்கிறது. -மத் 7:20 அச்சகோதரனின் சொப்பனத்தில் காணப்பட்ட கற்பாறை கிறிஸ்துவாயிருக்கிறார். அக்கற்பாறையில் காணப்பட்டதின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு கூறினேன். அது வேதாகமாயிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக வேதாகமம் வியாக்கியானிக்கப்பட்டு, அதற்கு முழுவதுமாக மதஸ்தாபன பூர்வமான அர்த்தத்தையே கொடுத்து வந்தோம். லவோதிக்கேயாவின் சபைக் காலத்திலோ கடைசி வரமானது சபையில் சேர்க்கப்பட்டு, லவோதிக்கேயாவின் காலத்தில் பிரசங்கிக்கும்படி கொடுக்கப்பட்டது. அவ்வேளை ஏழாம் தூதனின் வேளையாகும். அக்காலத்தில் காலா காலமாக தவறாக அர்த்தப்படுத்தப்பட்ட ஏராளமான காரியங்கள் காணப்படும். 58இது எவ்வாறு உள்ளதெனில், லுத்தர் 'விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்' என்ற செய்தியைப் பிரசங்கித்து விட்டு, அவர் நீண்ட காலம் உயிர் வாழாததினால், அது அப்படியே எந்தவித ஒழுங்குமின்றி நிலைத்திருக்க விட்டு விட்டார். அதன் பின்பு, அவருடைய பின்னடியார்கள் சபையை ஸ்தாபனமாக ஆக்கிவிட்டார்கள். லுத்தர் ஒரு போதும் ஸ்தாபனத்தை உண்டாக்கவில்லை. லுத்தருக்குப் பிறகுதான் அது நடைபெற்றது. அதன் பிறகு வெஸ்லி வருகிறார். வெஸ்லியின் காலத்திற்குப் பிறகு, அவரது பின்னடியார்கள் வெஸ்லி சபையை உண்டாக்கினார்கள். அதன் பிறகு பாப்டிஸ்டாகிய ஜான் ஸ்மித்தும், அவருக்குப் பிறகு அலெக்ஸாண்டர் காம்ப்பெல் மற்றும் ஏனையோரும் வந்தனர். ஆனால் சீர்திருத்தக்காரர்களாகிய மனிதர், எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துக் கொடுப்பதற்கு நீண்ட காலம் உயிர் வாழவில்லை. எனவே வெளியாக்கப்படாத ஏராளமான நிச்சயமற்ற காரியங்கள் விடப்பட்டிருக்கின்றன. அவர்கள் அவ்வாறு செய்தபோது... உதாரணமாக, ஜான் ஸ்மித் முழுக்கு ஞானஸ்நானத்தை திரும்பக் கொண்டு வந்தார். ஆனாலும் அது பிதா, குமாரன், பரிசுத்தாவி என்ற வெறும் பட்டங்களில் தான் கொடுக்கப்பட்டது. இவ்வாறு எத்தனையோ விஷயங்கள் தீர்க்கமாக எடுத்துரைக்கப்படாமல் விடப்பட்டிருந்தன. இவையெல்லாவற்றிற்கும் பின்பு, முடிவுக்காலத்தில் நாம் வந்திருக்கையில், கடைசி செய்தியானது, இது வரையிலும் தீர்க்கமாக எடுத்துரைக்கப்படாமல் விடப்பட்டிருந்த விஷயங்களை சரிசெய்து கொடுத்து, இவைகளை ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர், ஒரே ஞானஸ்நானம் என்ற நிலைக்கு கொண்டு வந்தது. 59இப்பொழுது வேதாகமமானது, முழுவதுமாக வியாக்கியானிக்கப்பட்டதற்குப் பிறகு, நீங்கள் கவனித்துப் பாருங்கள். அது கூர்நுனிக்கோபுர வடிவம் கொண்ட கற்பாறையின் உச்சிப்பகுதியை திறந்தது. (நான் இப்பொழுது கூர்நுனிக்கோபுர உபதேசத்தைக் குறித்துப் பேசவில்லை . ஏனெனில் ஒரு மனிதர் கூர்நுனிக்கோபுர உபதேசத்தை உபதேசிக்கிறார். அவர்கள் பேசுவது என்னவென்பதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள் என எண்ணுகிறேன். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது). ஆனால் அது எப்படியிருந்தபோதிலும், கூர்நுனிகோபுர உருவத்திற்கொப்பாய் அது இருக்கிறது. ஆனால் கூர்நுனிக்கோபுரத்தின் தலைப்பாகம் அதில் பொருத்தப்படாமல் உள்ளது. நான் எகிப்தில் கெய்ரோவில் இருந்திருக்கிறேன். அங்கே கூர் நுனிக்கோபுரத்தின் உச்சியாகிய தலைப்பாகமானது அதின் மேல் இல்லை. ஏனெனில், அது மூலைக்கல்லும், தலைக்கல்லுமாக இருக்கிறது. சபையில் அது மூலைக் கல்லாயிருக்கிறது. முழுமையடைந்த சபையிலோ அது தலைக் கல்லாயிருக்கிறது. எனவே தான் அது இன்னும் வரவில்லை . அது புறக்கணிக்கப்பட்ட கிறிஸ்துவாகும். அது வரப்போகிறது. அது வரும் போது, சபையானது அப்பொழுது, லுத்தரின் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாகுதல், பிறகு பெந்தேகோஸ்தேயின் செய்தியின் வழியாக ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்திற்குள்ளாக உருவகமாகி, இறுதியில் சபையானது மிகவும் சிறுபான்மையினராகும் அளவுக்கு ஆகிவிடும். அம்மக்களின் மத்தியில் ஒரு ஊழியம் நடைபெறும்; அவ்வூழியமானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அதே ஊழியமாகும் அளவுக்கு இருக்கும். இவ்வூழியமானது இயேசுவை திரும்பி வரச் செய்து, பூரண சபையை எடுத்துக்கொண்டு போகச் செய்யும். 60இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது, உண்மையும் உத்தமுமான எல்லா லுத்தரன்களையும், ப்ரெஸ்பிடேரியன்களையும், பாப்டிஸ்டுகளையும், மெதோடிஸ்டுகளையும், மற்றும் யாரெல்லாம் ஆவியினால் மறுபடியும் பிறந்திருக்கிறார்களோ, அவர்கள் யாவரும் அவரோடு கூட எடுத்துக் கொள்ளப்படுவார்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நமது சில பெந்தேகோஸ்தே சகோதரர்கள், கடைசிக்காலத்தில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் மக்கள் தாம் சபையின் மீதியானவர்கள் என விசுவாசிக்கிறார்கள்; அவர்களின் அக்கருத்திற்கு மாறுபட்ட சுருத்து உள்ளவனாக நான் இருக்கிறேன். தேவன் எவ்வாறு?— (தேவன் எவ்வாறு இவ்வண்ணம் செய்ய முடியும்? என்று நாம் கூற முடியாது. அவர் தமக்கு விருப்பமானதைச் செய்வார்). தேவன் லுத்தருக்கு “விசுவாசத்தினால் நீதிமானாகுதலை”யே வாக்குரைத்தார். அதுதான் அவர்களுக்கு தெரியும். பார்த்தீர்களா? அதை அவர் ஆதரிக்கிறார் என்று தேவனுடைய கிருபையினாலும் வேத வாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டும் நான் விசுவாசிக்கிறேன். சபையை எடுத்துக் கொள்வதாக அவர் லூத்தருக்கும் வாக்குரைத்திருக்கிறாரே! ஆண்டவர் முதலாம் ஜாமத்தில் வரவில்லை ; அவர்கள் நித்திரையடைந்தார்கள். பிறகு இரண்டாம் ஜாமம் தொடங்கி ஆறு ஜாமம் வரையும் அவர் வரவில்லை . கடைசியாக ஏழாம் ஜாமத்தில் அவர் வருகிறார். அதுவே ஏழாம் சபையின் காலமாயிருக்கிறது. அதுவே ஏழாம் தூதனின் செய்தியாயிருக்கிறது. அவர் வந்தபொழுது, கன்னிகையர் யாவரும் தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் எவனும், அவன் ப்ரெஸ்பிடேரியன், லுத்தரன், பாப்டிஸ்டு இதில் யாராயிருந்தாலும், எடுத்துக்கொள்ளப்படுதலில் போய்விடுவான். அவ்வேளையில் மணவாட்டி வெளியே அழைக்கப்படுவாள் என நான் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்களில், மரணத்தை ருசி பாராமல், ஒரு க்ஷனத்தில், ஓரிமைப்பொழுதில் மறுரூபமாகும் சிலர் இருப்பார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன். -மத் 25:7, 1 கொரி 15:52 61ஆனால், சகோதரன் ஜாக்ஸனின் சொப்பனத்தில் நீங்கள் கவனித்தவரை, அந்தப் பாறையின் உள்ளே, எந்த எழுத்தும் இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள். அதினிமித்தமாகத் தான் நான் மேற்கு நோக்கிப் போனேன். இப்பொழுது, அது சம்பவித்துவிட்டது. மேலும், நான் உங்களிடம், “ஒரு நாளில் அதின் அர்த்தம் என்ன என்பதைக் கூறுவேன்” என்று கூறியுள்ளேன். அதற்காகத்தான் மேற்கே சென்றேன். “ஐயன்மீர் இதுவா சமயம்?” (Sirs is this the Time? — வால்யும் 2 - நம்பர் 11) என்ற செய்தியை டேப்பிலும், இங்கு பிரசன்னமாகி கேட்டவர்களுக்கும் தெரியும், நான் அந்த தரிசனத்தைக் கூறியுள்ளேன் அவர்களுக்கு என்று. செய்திகளை டேப்புகளில் சகோதரர்களில் யாரிடமாவது அந்த செய்தி இல்லாவிட்டால், அதை படிக்க விரும்பினால், “ஐயன்மீர் இதுவா சமயம்?” என்ற செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அச்சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்கள், வாரங்களுக்கு முன்பே, டூசானில் வடக்கே நான் இருப்பதை தரிசனத்தில் பார்த்தேன். ப்ளாக் ஸ்டாஃப்புக்கு கிழக்கிலும், டூசானுக்கு வடக்கிலும் இருப்பதாகவும், அப்பொழுது, தேசத்தையே அசைப்பது போல் தோன்றும் ஓர் வெடியோசை எழும்புவதாகவும் காணப்பட்டது. அதை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? தேசத்தையே அசைக்கும் அளவுக்கு உள்ள வெடிப்பு. 62நல்லது, அங்கே அக்காரியம் சம்பவித்தபோது, அங்கே நின்று கொண்டிருந்தவர்களில், குறைந்தது ஒரு மனிதனாவது இப்பொழுது இங்கே பிரசன்னமாகியிருக்கிறார். அச்சம்பவம், அம்மலையின் பாறைகளை உண்மையிலேயே, குலுக்கி உருண்டோடிடச் செய்தது. அச்சமயத்தில் தான், நான் அந்த ஏழு தூதர்களை ஒரு கூர்நுனிக்கோபுர வடிவில் கண்டேன். நான் அப்படியே வாரி எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் தேவனுக்காக ஏழு முத்திரைகளைத் திறக்கும்படி கிழக்கில் கொண்டுவரப்பட்டேன். அவைகளை நீங்கள் பெற்றிருக்காவிட்டால்... இயேசு வரத்தாமதித்தால், மேலும் நான்... என்னுடைய கொள்ளுப் பேரன்கள் (என் மகன்) சின்ன பவுலின் பிள்ளைகள் காலம் வரைக்கிலும் இயேசு வரத்தாமதித்தால்... அப்பொழுதும் அது ஜீவனுள்ள தேவனுடைய நித்திய சத்தியமாக இருக்கும்! அது இம்மலையினுள்ளே முத்திரையிடப்பட்டிருந்தது. அதில் ஏதும் எழுதப்படவில்லை . அதின் அர்த்தம் கொடுக்கப்பட்டாக வேண்டும். நான் திரும்பி வந்த போது, முதலாம் தூதன் அந்த முதல் இரவில், முதலாம் முத்திரையைத் திறந்தார்; அப்பொழுது அது. நமது ஜீவியத்தில் அதைப்பற்றி நாம் அதுவரை கேட்டவைகளுக்கு முரணாக இருந்தது. அவ்வாறே, ஏழு முத்திரைகளும் வந்தன. நீங்கள் அதை அறிவீர்கள். உங்களில் அநேகர் அது சம்பவித்தபொழுது இங்கே பிரசன்னமாயிருந்தீர்கள். 63அவ்வேளையில் நான் அதை அறியவில்லை . ஆனால் சகோதரன் ஃப்ரெட் சோத்மன் இங்கே இருக்கிறார் என்று அறிகிறேன். சகோதரன் நார்மனும் இங்கே இருக்கிறார் என்று நிச்சயித்திருக்கிறேன். நாங்கள் மலை மேல் இருந்தோம். ஹூஸ்டனில் உள்ள ஒரு சிறு பையன் மின் நாற்காலியில் சிக்கியதிலிருந்து காப்பாற்றும்படி நான் அங்கே போக வேண்டியதிருந்தது. நான் அங்கிருந்து திரும்பியதின் பிறகு சகோதரர்களுடன் வேட்டையாடச் சென்றேன். நான் அங்கே நின்றுகொண்டு, அங்கு வளர்ந்திருந்த “கோட்ஹெட்ஸ்” என்று அழைக்கப்படும் ஒருவகை சுரசுரப்பான புல்பூண்டை பிடுங்கிக்கொண்டு இருந்தேன். தரிசனத்தில் சொல்லப்பட்டவண்ணமாகவே, வெடித்தல் ஏற்பட்டது. சகோதரன் ஃப்ரெட் அவர்களே, அது சரிதானே? நான் தரையிலிருந்து ரொம்ப தூரம் உயர தாண்டியிருக்க வேண்டும். எனக்கு சற்று மேலே கர்த்தருடைய தூதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நான் இந்த ஏழு முத்திரைகளை இங்கு வந்து உடைக்கத்தக்கதாக, செய்தியைத் திரும்பக்கொண்டு வந்தார்கள். ஏன் இங்கே அதைச் செய்ய வேண்டும்? ஏன் இந்தக் கூடாரத்தில்? அங்கே நான் ஏன் அதைச் செய்யக்கூடாது? ஏனெனில் நான் என்னுடைய சபையாருக்கும், தேவனுக்கும், எந்தவொரு புதிய செய்தியும், இக்கூடாரத்திலிருந்தே முதலில் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும் என வாக்குரைத்திருக்கிறேன். நான் என்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும்படி, இங்கே தங்கி அதைச் செய்யும்படி தேவன் எனக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். அதன் பிறகு, நான் உடனே திரும்பிச் சென்றேன். 64அந்த வேளையில், அதைப்பற்றிய படங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத்தெரியாது. தூதர்கள் அச்செய்தியை கொண்டுவரும்படி பரலோகத்தைவிட்டு கீழிறங்கியபோது விஞ்ஞானிகள்தான் அவற்றைப் படமெடுத்தார்கள். அத்தூதர் கூட்டத்தில் வலதுபக்கத்தில் இருந்த தூதன் தனது மார்பை பின் தள்ளிக்கொண்டு, அவருடைய சிறகுகள்? அதை உங்களிடம் நான் ஏற்கனவே கூறியுள்ளது ஞாபகமிருக்கிறதா? எவ்வாறு நான் அவரைக் கவனித்தேன் என்றும் மற்றவர்களினின்றும் அவர் சற்று விசேஷமானவராக இருந்தார், என்பதையும் நான் கூறியிருந்தேன். அவர்கள் அதைப் படமெடுக்கிறார்கள் என்பதை நான் அப்பொழுது அறியாதிருந்தேன், ஏனெனில், நான் உடனடியாக கிழக்கு நோக்கி விரைந்தேன். ஆனால், டூசானுக்கு நான் வீடு திரும்புகையில், அது ஏறத்தாழ தேசம் பூராவும், மெக்ஸிகோ மற்றும் மேற்கு மாகாணங்கள் பூராவும் காணப்பட்டு, அதைப் பற்றி பத்திரிக்கைகளில் பிரசுரமாகியிருந்ததைக் கண்டேன். இங்கே 'கூரியர்' என்ற பத்திரிக்கையில் வந்திருக்கிறது என நினைக்கிறேன். அசோஷியேடெட் பிரஸ்ஸிலும் அது வெளியாகி இருக்கிறது. எத்தனை பேர் அந்த மர்மமான மேகத்தை வானில் பார்த்தீர்கள்? உயர்த்தப்பட்ட கரங்களைப் பாருங்கள்! இப்பொழுது லைஃப் பத்திரிக்கை அதை பிரசுரித்திருக்கிறது. என்னிடத்தில் அதைப்பற்றிய லைஃப் பத்திரிக்கை கட்டுரை உள்ளது. அதே வேளையில்தான் நான் அங்கே இருந்தேன். மேகத்தின் கூர்நுனிக்கோபுரத்தைப் பார்த்தீர்களா? அதற்கு சற்றுக் கீழே தான் நான் நின்றுகொண்டிருந்தேன். அங்கே மற்றவர்களிலிருந்தும் சற்று விசேஷமாகக் காணப்பட்ட வலது பக்கத்தில் உள்ள தூதனைப் பாருங்கள். அத்தூதனுடைய முனைப்பான செட்டைகளைப் பாருங்கள். அதைப்பற்றி நான் முன்னுரைத்த வண்ணமாகவே அது இருக்கிறது. மெக்ஸிகோ மற்றும் பல்வேறு இடங்களின் பார்வையில் பட்டதாக இருக்க, அங்கிருந்து அதைப் படமெடுத்திருக்கிறார்கள். இங்கே ஒரு விஞ்ஞானி இப்படத்தைப் பற்றியும் அதை வைத்து கொண்டிருக்கிற மக்களைப் பற்றியும் எல்லாவித தகவல்களையும் சேகரிக்கவும் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் முற்பட்டுக் கொண்டிருக்கிறார். 65அது ஒரு மேகம் என்று கருதப்படுவது இயலாத காரியம் என்றும், ஏனெனில் ஆகாயத்தில் 6 அல்லது 8 மைல்களுக்கு உயரத்திற்கப்பால் ஈரமானது இல்லை என்றும் இந்த விஞ்ஞானி கூறுகிறார். ஆகாயவிமானத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து செல்கையில், வழக்கமாக விமானத்தில் நாம் 19,000 அடி உயரத்தில் பறக்கிறோம், அப்பொழுது புயல்காற்றுக்கு மேலே போய்விடுகிறோம். இந்த லைஃப் பத்திரிக்கையில் இக்கட்டுரையை எழுதியுள்ள இந்த விஞ்ஞானி கூறுகிறபடி, இந்த மேகமானது ஆகாயத்தில் 26 மைல் உயரத்தில் காணப்பட்டுள்ளது. எனவே, மேகத்தை உண்டாக்குவதற்கான ஈரம் இருக்கக்கூடிய உயரத்திற்கு வெகு தொலைவில் உயரே தான் இந்த மர்ம மேகம் இருக்க வேண்டும். “ஒரு விமானத்தின் சப்தம் உண்டாக்கும் கருவியின் சப்தம் போல் அது இருந்தது” என்று நான் அன்று கூறியதை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்? ஆனால் அந்த நாளில், அப்பகுதியின் மேல் ஏதாவது விமானம் பறந்ததா என்பதை நன்கு புலனாய்ந்து அப்படியொன்றும் விமானம் அம்மாவட்டத்தில் பறக்கவில்லை என்பதையும் அவ்விஞ்ஞானி இப்பத்திரிக்கையில் கூறியுள்ளார். பொதுவாக விமானத்தின் பின்னால் வெளிப்படும் புகையானது வெளியே தள்ளப்படுகிற ஈரமுள்ள காற்றுதான். ஒரு ஜெட்டைப் போல் விமானத்தின் இப்பகுதி அதை வெளியே இழுத்து தள்ளுகிறது. அவ்விமானமானது தன்னை முன்னே இழுத்துக் கொள்கையில், ஈரத்தை காற்றில் கக்குகிறது. விமானமானது ஈரத்தை வெளியே தள்ளுகிறது. அவ்விதமாக அதை வெளியே தள்ளித்தான் விமானம் முன்னே செல்லமுடிகிறது. 66ஆனால் இங்கோ அம்மேகம், இயல்பாக மேகங்கள் உருவாகக்கூடிய ஈரமுள்ள வானப்பகுதிக்கு அப்பால், அம்மாவட்டத்தில், விமானங்கள் ஏதும் பறக்காத வேளையில் தோன்றியது. அதாவது சாதாரண மேகம், இம்மேகம் தோன்றிய பகுதியில் ஏற்பட முடியாது. ஏனெனில், அதற்கான ஈரப்பசை இல்லாத இடமது. அது பூமிக்கு மேலே 26 மைல் உயரத்தில் முப்பது மைல் நீளத்தில் காணப்பட்டது. அநேகமாண்டுகளுக்கு முன்பாக “கர்த்தருடைய தூதனானவர் அக்னிஸ்தம்பம் போல் காணப்பட்டார்” என்று நான் அந்தப்படம் எடுக்கப்படும் முன் கூறியது போல் அது இருக்கிறது. அது சத்தியமானது என்று விஞ்ஞானமும் அங்கீகரிக்கத்தக்க வண்ணம் தேவன் செய்தார். அதைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதை அங்கீகரிக்கும்படியும் அப்படியாயிற்று. அது சத்தியமானது என்று விஞ்ஞானமும் சாட்சியிடத்தக்கதாக தேவன் செய்தார். இப்பொழுது நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம்? ஏழு முத்திரைகளை எழுதத்தக்கதாக இங்குள்ள எனது நண்பரொருவரை நான் ஒருவேளை கேட்டுக் கொள்ளக்கூடும். அதற்காக இப்படத்தை அவர் உபயோகிக்க வேண்டியிருக்கலாம். எனவே இப்படத்தின் நகலை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? அப்படியாயின் அதை உங்களுடைய குறிப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள். 67இதைப் பற்றி கண்டுபிடிக்க விரும்பும் அவ்விஞ்ஞானியிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கூறுவது என்ன நன்மைபயக்கும்? அதைக் கேட்டு அவர் பரிகசிக்க மாத்திரம் செய்வார். எனவே, அவ்வாறு நமது முத்துக்களை நீங்கள் இறைக்கவேண்டாம். ஆனால் நாம் அதை அறிவோம். சபையானது அறிந்திருக்கிறது. தேவன் அது சத்தியமானது என்று அறிந்திருக்கிறார். -மத் 7:6) 86. அதன்பிறகு, இவ்விஷயத்தைப் பற்றி வியந்து, எனக்கு என்ன சம்பவிக்குமோ என்று எண்ணி, இதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் எங்கேயிருந்தேன் என்று தெரியுமா? டூசானுக்கு வடக்கேயும், ப்ளாக்ஸ்டாஃப்புக்கு கிழக்கிலும் இருந்தேன். நான் எங்கே நின்று கொண்டிருப்பேன் அச்சமயத்தில் என்பதை பல மாதங்களுக்கு முன் சரியாக அந்த இடத்தைக் குறிப்பிட்டு முன்னுரைத்தது போல் அங்கே நான் இருந்தேன். முன்னுரைத்ததின்படி, இப்பத்திரிக்கை குறிப்பிட்டது போல், நமது சாட்சியின் படியும், சரியாக அந்த இடத்தில் இது சம்பவித்தது. தேவன் பூரணமானவராக இருக்கிறார். அவர் பொய் சொல்லக்கூடாதவர். அவர் சொன்னது நிச்சயமாக நிறைவேறும். 68“ஐயா இது என்ன சமயம்” என்று செய்தி அடங்கிய ஒலி நாடாவை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதில், நான், “ஏதோ ஒரு மகத்தானதொரு காரியம் சம்பவிக்கப்போகிறது, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளேன். இப்பொழுது அதைப்பற்றிமுழுத் தேசமும் சாட்சி பகரும்படி ஆகியிருக்கிறது. அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு செய்திப் பத்திரிக்கையும், மற்றுமுள்ள நமது முதன்மையான பத்திரிக்கைகளும் அதைப்பற்றி சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் எல்லாம் முடிவு பெறவில்லை. விஞ்ஞானத்தின்படி இனி விமோசனம் இல்லையென்றும், அணுகுண்டுகள் நமக்கென காத்துக் கொண்டிருக்கின்றன என்றுள்ள இவ்வந்தகார வேளையில், கிறிஸ்தவராயிருக்கும் மக்கள், இம்மகத்தான காரியங்களை அறிந்து கொள்வதற்கு எவ்வளவு சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள்! ஒன்று சேர்ந்து கொண்டிருக்கும் நமது மதஸ்தாபனங்களிலும் நம்பிக்கையில்லை; அவைகள் மிருகத்தின் முத்திரையோடு ஒன்றித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது பொருளாதாரத் துறையிலும், மதஸ்தாபனங்களுக்கிடையே உள்ள கிறிஸ்தவ ஐக்கியத்திலும் நமது நம்பிக்கை போய்விட்ட நிலைமையில் நாம் இருக்கிறோம். கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் கத்தோலிக்க இயக்கத்திற்குள் சங்கமமாகி, சபைகளின் சமஷ்டியானது, இறுதியில் மிருகத்தின் முத்திரையாக ஆகிவிடும். ஆனாலோ, தேவன் நேசித்து, மெய்பொருளுக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கோ, வேதத்தில் வாக்குத்தத்தம் செய்த தேவனானவர், அதை நமது முகத்திற்கு முன்பாக வியாபிக்கச் செய்து, சபையை உருவாக்கி, ஜனங்களும், விஞ்ஞானமும், பத்திரிக்கைகளும் மற்றும் யாவும் அவரே தேவன் என்றும், அவரால்தான் காலத்தைக் கூறமுடியும் என்பதை அங்கீகரிக்கும்படி செய்கிறார். என்னே வேளையிது! 69அன்றொரு நாள் காலையில் சேபினோ கேன்யான் என்ற இடத்தில், அம்மலையின் உச்சியில் என் கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்தியவாறு, என்ன சம்பவிக்கப் போகிறதோ என்று வியந்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில், அந்தப் பட்டயம் எனது கையில் விழுந்தது. அதின் கை பிடியில் முத்து பதித்திருந்தது, அதற்கு உறையும் இருந்தது. அப்பட்டயம் மூன்று அடி நீளமுள்ளதாகவும் பளீரென மினுங்கும் ஒரு வகை உலோகத்தாலாகியதும் மிகவும் கருக்கானதாயும் இருந்தது. “இவ்வகையான ஆயுதங்களைக் கண்டு நான் பயப்படுகிறேன்” என்று கூறினேன். அப்பொழுது அம்மலைக்கணவாயை அசைக்கத்தக்கதாக ஒரு சத்தம் பேசியது. “இது கர்த்தருடைய பட்டயம்” என்று அச்சப்தம் கூறியது. கர்த்தருடைய பட்டயம், “கர்த்தருடைய வார்த்தை ”யே யாகும். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்குள்ளதாயிருக்கிறதே. 70அந்த சமயத்தில், இங்கே சபையில் தீரமிக்க சிறிய சகோதரரொருவர் இருக்கிறார்... அவர் ஒரு இராணுவவீரராக இருந்தவர், இராணுவத்திலிருக்கையில், சண்டையின் போது, குண்டு வெடிப்புக்கு அவர் இரையாகி, அவரது காலின் முக்கியமான நரம்பு வெடித்து, அவரது புயம் முழுவதும் காயப்பட்டு, ஒரு காலும் சேதமாகி, மருத்துவர்களால் கைவிடப்பட்டு மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சையளிப்பது பயன் தராது, அவர் பிழைக்கமாட்டார் எனக்கருதினர். ஆனாலோ தேவன் கிருபையினால் அவரை இரட்சித்து ஒரு நாளில் அவரை சுகமாக்கினார். அது தான் சகோதரன் ராய் ராபர்ஸன் ஆவார். அவர் ஹூஸ்டனில் அப்படம் எடுக்கப்படுகையில் அங்கே இருந்தார். அவரது மனைவிக்கு, பகலில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும், அவர்களுக்கு என்ன கோளாறு உள்ளது என்பதும், அது சுகமாக்கப்படும் என்பதும் தரிசனத்தில் கண்டு உரைக்கப்பட்டது. அக்காரியம், சகோதரனுக்கு ஒரு விசுவாசத்தைக் கொடுத்தது. ஆனால் அவரோ இராணுவத்தினராக இருந்தவர். (இங்கிருந்து இதை சொல்வதற்கு அவர் என்னை மன்னிப்பார் என நான் நம்புகிறேன்). எனவே, கடுமையான, மிகவும் கண்டிப்பான துறையில் இருந்தவர்; இராணுவத்தில் உத்தரவுகளை இடும் தளபதியாக இருந்தவர். “இதை செய், அதை செய்” என ஜபர்தஸ்தாக உத்தரவு இட வேண்டியவராக இருந்தார். அப்படியிருந்த போதிலும் அவர் விசுவாசித்தார். ஆனால் சபையில் நிலையாக வந்து கொண்டிருக்கையில், இயற்கைக்கு மேலான அமானுஷ்யமான காரியங்களை அவர் பார்க்கையில் அவர் கூறினார், “நான் அதை விசுவாசிக்கிறேன், ஆனால் அவைகள் வேறு யாருக்கோ உரியது” என்று. 71ஒரு நாள் காலையில் கர்த்தர் அவரை எழுப்பினார். இப்பொழுது இங்கே என்னைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற சகோதரன் ராய் ராபர்ஸன் அவர்கள் அக்காட்சியைக் கண்டு, அதைப் புரிந்து கொள்ளமாட்டாமல் அதைப்பற்றி அரிசோனாவிலிருந்து எனக்கு கடிதம் எழுதினார். நான் அவரை என்னிடம் வரும் படி அழைத்தேன். அக்காட்சியில் அவரும் நானும் எருசலேம் பட்டணத்தில் கர்த்தருடைய இராப்போஜன மேஜையில் உட்கார்ந்திருக்கிறதாகவும், அப்பொழுது அந்த பெரிய ஒளிஸ்தம்பம் உள்ளே வந்ததையும், கர்த்தருடைய மேசையிலிருந்து என்னை அவ்வொளி ஸ்தம்பம் எடுத்துச் சென்றதாகவும், நான் மேற்கு நோக்கி செல்வதாக அவர் கண்டதாகவும் கூறினார். அவர் கிழக்குப் பக்கமாக உட்கார்ந்திருந்து நான் மேற்கு நோக்கிப் போவதை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவ்வொளி உள்ளே வந்து என்னை எடுத்துக்கொண்டு சென்றது. இதை ஒரு தரிசனமாக ஒரு நாள் அதிகாலையில் கண்டிருக்கிறார். அதிகாலையில் மூன்று அல்லது நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும்பி இக்காட்சி நடைபெறுவதைக் கண்டிருக்கிறார். இச்சம்பவத்திற்குப் பிறகு “சகோதரன் பில், (பிரான்ஹாம்) திரும்பி வாருங்கள்” என்று அநேக நாட்களாக கதறிக் கொண்டிருந்திருக்கிறார். நானும் சகோதரன் ராயும் உண்மையான சகோதரர்கள். “நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம், ஒன்றாக வேட்டையாடுகிறோம். நாங்கள் சகோதரர்கள். அவரை திரும்பி கொண்டு வாருங்கள்” என்று எனக்காக அவர் தன் தொண்டை கட்டிப் போகும் அளவுக்கு கதறிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் கூறினார். அந்த அக்னிஸ்தம்பமானது வந்து, என்னை (சகோ. பிரான்ஹாமை) அம்மேசையின் தலைப் பகுதியில் உட்கார வைத்தது, அப்பொழுது நான் மறுரூபமாக்கப்பட்டிருந்தேனாம். நான் வேறு விதமாகக் காட்சியளிக்கும்படி நான் மருரூபமாக்கப்பட்டது சகோதரன் ராய்க்கு இரகசியமான தொன்றாக இருந்தது. (நான் ஞாபகத்தில் வைத்திருக்கும்படியானதொரு காரியத்திற்காக நான் இவ்விஷயத்தை இங்கே வைக்கிறேன்) “மறுரூபமாக்கப்பட்டு” (இதற்கான அர்த்தத்தை சகோதரனுக்கு கொடுக்கும்போது). 72ஏழுமுத்திரைகளை பிரசங்கிப்பதற்காக நான் திரும்பி வரும் சற்று முன்னதாக இது நடந்தது. ஏழுமுத்திரை செய்திக்காக நான் திரும்பி வந்திருக்கையில், அவர் என் மகன் பில்லியைப் பற்றிக் கொண்டு, என்னை சந்தித்து என்னிடம் பேசும்படி விரும்பியிருக்கிறார். நான் அவ்வேளையில் ஏழுமுத்திரைக்காக ஜெபத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். பிறகு அவர் என்னிடம் அக்காட்சி மீண்டும் ஏற்பட்டதாகக் கூறினார். சகோதரன் ராய் அவர்களே! நான் இதை சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். அவர் கூறியதாவது: அவர் மீண்டும் அதிகாலையில் எழுந்தாராம்; அவர் தமது அறையில் அந்த பெரிய ஒளி அல்லது மேகத்தை ஒரு மலைமேல் இருக்கக் கண்டாராம். அவர் சமீபத்தில் என்னிடம், “ஒரு மலையின் மேல் மேகம் இருப்பதில் ஏதாவது முக்கியத்துவம் உண்டா ?” என்று கேட்டார். நான் அவருக்கு வேதத்திலிருந்து கூறியதாவது: நான் கூறினேன். “ஆம் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மலையின் மேல் இயேசுவோடு சென்ற போது, கர்த்தராகிய இயேசுவை ஒரு மேகம் நிழலிட்டது. அப்பொழுது, தேவன், ”இவர் என்னுடைய நேச குமாரன்“ என கூறினார். சமீபத்தில்தான் நான் அதைப்பற்றி பிரசங்கித்திருக்கிறேன். அது ஒரு சிறிய செய்தியாகும்; டேப்பில் பதிவு செய்கிற சகோதரர்கள் அதைப் புரிந்து கொள்வர்கள். அச்செய்தியின் தலைப்பு, ”அவருக்கு செவி கொடுங்கள்“ என்பதாகும். -மத் 17:5 73சகோதரன் ராய் அக்காட்சியில், நான் மலையின் மேல் ஏறிப்போனதாகவும், நான் அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்ததைக் கண்டதாகவும் கூறினார். மேகத்திலிருந்து ஒரு சப்தம் கீழ்க்கண்டவாறு கூறிற்றாம். (அப்படித் தானே சகோதரன் ராய் அவர்களே?) “இவர் என்னுடைய ஊழியக்காரன், மோசே வழி நடத்தியது போல், இவரும் மக்களை வழிநடத்தத்தக்கதாக இக்காலத்துக்குரிய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அவரை நான் அழைத்திருக்கிறேன். வார்த்தையைப் பேசி எதையும் உருவாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.” மோசே வண்டுகள் ஏற்படும்படி பேசியது போல் உள்ளது ஆகும் அது. ஏற்கனவே சம்பவித்த, அணில்கள் மற்றும் காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி நாம் அறிவோம். சின்ன ஹேட்டி ரைட்! அவள் வீட்டில் நடந்ததை அவள் அறிவாள் எனக் கருதுகிறேன். ஆண்டவர், மோசே செய்த காரியத்தையே நான் செய்ததாக அங்கு கூறினார். 74ஒரு பிரயாணத்திற்குப் பிறகு நான் திரும்பி வருகையில் ஆண்டவர் அதைக் கூறினார். நான் பட் (Bud) — ஐப் போய்ப் பார்த்து வர விரும்பினேன். வேட்டைக்காரராகிய அவர் உடல் நலிவுற்றிருந்தார். நான் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமுன்னர், இதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். நான் ஒரு விநோதமான சொப்பனத்தைக் கண்டேன். இதைப் பற்றி நான் கூறுவதால், அதைப்பற்றி எப்பொழுதாவது அறியவரும் போது, அது எனது மைத்துனர் மனதை நோகச் செய்யாது என நம்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கிற எனது மனைவியையும் இதினிமித்தம் நான் மனம் புண்படச் செய்யவில்லை . ஆனால் அவள் அதை அறிவாள். இச்சொப்பனத்தை நான் அநேகமாதங்களுக்கு முன்பாக, ஏறத்தாழ அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் கண்டேன். அச்சொப்பனத்தில் நான் இருளில் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கிறதாக இருக்கிறது. என்னைப் பற்றி அக்கறையுள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரிய வில்லை, எனக்கென்று போவதற்கு ஒரு இடமும் இல்லை . நான் ஒரு நாடோடியாக (tramp) ஆகிவிட்டேன். எனக்கு மிகவும் குளிராக இருந்தது, தூரத்தில் உற்று நோக்கியபோது நெருப்புத் தெரிந்தது. நான் அங்கே சென்ற பொழுது, அங்கே நகரக் குப்பைக் கொட்டு மிடங்கள் இருந்தன. பல பள்ளங்கள் அங்கே இருந்தன. அவற்றில் தான் நெருப்பு இருந்தது. அப்பள்ளங்களுக்கிடையே, குளிர்காலத்தில் கடுங்குளிரினால் உறைந்து போகாதபடி கணப்பினால், நாடோடிகள் தங்களை சூடு உண்டாக்கிக் கொண்டு படுத்துக்கொள்ளும் படியான இடங்கள் உண்டாயிருந்தன. எனக்கு மிகவும் குளிராயிருந்தது. எனக்கு சூடுஉண்டாக்கிக் கொள்ளும்படி நான் அந்த கணப்பினண்டையில் சென்றேன். அங்கே முழுவதும், நாடோடிகள் படித்திருந்தார்கள். (ஹிப்பிகளைப் போன்ற ஒரு கூட்டத்தார் — மொழி பெயர்ப்பாளர்) அவர்களை நான் காணவில்லை . ஆனால் அவர்கள் யாவரும் தங்களுக்கு உறங்குவதற்குரிய இடங்களில் படுத்து கொண்டிருப்பதைப் போல் காணப்பட்டது. அங்கே எனது மைத்துனர் ஃப்ளெட்சர் ப்ராயைப் பார்த்தேன். 75இந்த ஃப்ளெட்சரைப் பற்றி நான் நினைவு கூருகையில், அவன் ஒரு நல்ல பையன். இது சிறுவருக்கு ஒரு பாடமாக அமையக்கூடும். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜேம்ஸ் ஃப்ளெட்சர் ப்ராய் என்ற அந்த கட்டழகு வாலிபன் தவறான கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டு, தனது முதலாவது குடியைப் பருகினான். எனது வீட்டின் திரைகளுக்குப் பின்னாக இருந்து அவன் என்னை அழைத்ததை நான் நினைவு கூறுகிறேன். அவரது தந்தை அநேகமாண்டுகளுக்கு முன்பே மகிமைக்குள் கடந்து சென்று விட்டார். அவர் அன்று கித்தார் இசைக் கருவியில் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். தூரத்தோர் குன்றிலே ஓர் நீசக் குருசு நிற்குதே ஃப்ளெட்சர் என்னை திரும்பவும் அழைத்தான். “சகோதரன் பில் (பிரான்ஹாம்) எனக்காக ஜெபியுங்கள். எனது தந்தை அந்தப் பாடலை பாடிக் கொண்டிருந்தார், ஆனால் நானோ இன்று இவ்வாறு குடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினான். “ஃப்ளெட்சர்!” (அப்பொழுது அவன் 18 வயது வாலிபனாயிருந்தான்) என்று நான் அவனை அழைத்து, “அந்த வழியிலே செல்லாதே” என்று கூறினேன். ஆனால் அவன் செவிமடுக்கவில்லை. அவன் தொடர்ந்து அத்தவறான பாதையிலேயே சென்று முடிவில் ஒருமுழுக் குடிகாரனாக மாறிவிட்டான். அவனது மனைவி அவனை விட்டும், அவனது பிள்ளைகளை விட்டும் சென்று விட்டாள். இவ்வேளையில் நான் அவனை நேசிக்கிறேன் என்பதை தேவனறிவார். வெறும் நாடோடியாக அலைந்து கொண்டிருந்த அவனுக்காக நான் ஜெபிக்கச் சென்றிருந்தேன். அவனுக்குக் கோபம் வந்தது. சமீபத்தில்தான் நான் அவனுக்காக ஜெபிக்கப்போயிருந்தேன். அப்பொழுது ஏழு முத்திரைகளை நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். “ஃப்ளெட்ச்! என்னிடம் இரு ஜோடி உடுப்புகள் உள்ளன. அவற்றை நான் உனக்கு தர விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். “அதை நீங்கள் எனக்குத் தராதீர்கள்” என்று கூறினான். அவனுக்கு துணிமணிகள் கிடையாது என்பதை நான் அறிவேன். எனவே நான் அவனிடம், “ஏன் நீ அந்த துணிகளை எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று வினவினேன். அவன் “ஊ...ஊ” என்று கூறிவிட்டு, என்னை உற்று நோக்கி “நான் அவற்றை என்ன செய்வேன் தெரியுமா? அவ்வுடுப்புக்களை அடமானம் வைத்து பணம் பெற்று அதினால் குடித்து விடுவேன்” என்று கூறினான். நான், “ஃப்ளெட்ச்! நான் கொஞ்சம் பணம் உனக்குத் தருகிறேன்” என்று கூறினேன். அவன் அதற்கு, “இல்லை , சகோதரன் பில் அவர்களே, நீர் அதை எனக்குச் செய்ய வேண்டாம்” என்று கூறினான். அவன் தனது இருதயத்தில் உண்மையானவனாக இருந்தான். ஆனாலோ அவன் குடிகாரனாக மாறி, அலைந்து திரிகிறவனாக ஆகிவிட்டான். அவனது மனைவியும் தவறான பாதையைத் தெரிந்துகொண்டு விட்டாள். இவ்வாறாக சம்பவங்கள் யாவும் அந்த சிறுமைப் பட்டவனுக்கு நேர்ந்துவிட்டது. 76சொப்பனம் கண்டபிறகு, படுக்கையைவிட்டு எழும்பினேன். நான் எழும்புமுன்னதாக ஃப்ளெட்ச் அச்சொப்பனத்தில் என்னிடம், “பில்லி, நான் உமக்கு ஒரு இடத்தைத் தேடித்தருகிறேன். என் பிள்ளைகள் பசியாயிருந்தபோது அவர்களுக்கு உணவளித்தீர். நீங்கள் ஒரு தகப்பனாக அவர்களுக்கு இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு குளிரினின்று பாதுகாப்பாக இருக்கும் படி ஒரு இடத்தை நான் தேடித் தருவேன்” என்று கூறினான். இவ்வாறு நாங்களிருவரும் அந்த தேசாந்திரிகள் உட்கார்ந்திருந்த அவ்விடங்கள் வழியாக நடந்து வந்து இறுதியாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தோம். அப்பொழுது ஃப்ளெட்ச், “நான் இங்கே உட்காருவேன்' எனக் கூறினான். நான் அவனிடம் “நான் தொடர்ந்து மேலே நடந்துசென்று, ஒரு இடத்தை எனக்கு தெரிந்தெடுக்க முடியுமா என்பதைப் பார்க்கிறேன்” என்று கூறினேன். அந்தக் குளிரான இராத்திரியில், நான் மேலே நடந்து சென்று இருளில் உற்றுக் கவனித்தேன். நான் இவ்வாறாக சிந்தித்தேன். “ஒரு சமயத்தில் சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை தமது சபையை நடத்தும்படி செய்தார். ஒரு காலத்தில் அவரது சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கவும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதைக் காணவும் செய்தார். சில நிமிடங்களாவது என்னோடு பேசிவிட வேண்டும் என்று வாஞ்சித்து, உலகம் பூராவிலிருந்தும் ஆண்களும் பெண்களும் என்னிடம் வந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது! ஆனால், நானோ இப்பொழுது ஒரு தேசாந்திரியாக இங்கே இருக்கிறேன். என்னை யாரும் விரும்பவில்லை. எனக்கு குளிராயிருக்கிறது, நான் என்ன செய்ய வேண்டும்?” இவ்வாறு நான் சொப்பனத்தில் எண்ணினேன். பிறகு நான் எழும்பிவிட்டேன். 77இச்சொப்பனத்தைப்பற்றி என் மனைவியிடம் நான் கூறுகையில், “ஒரு வேளை ஃப்ளெட்ச்சுக்கு ஏதாவது தேவைப்படலாம். அதுவே சொப்பனத்திற்கு அர்த்தமாயிருக்கலாம்“ என்று கூறினாள். எனவே அவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க நாங்கள் உடனே விரைந்தோம். அவனுடைய சகோதரன் அவனைக் கண்டுபிடித்தார். அவன் அங்கே 'வீட்னர்ஸ் ' (Weidners) குடும்பத்துடன் தங்கியிருந்தான். அங்கே வியாபாரக் குதிரைகள் இருக்கின்றன. அங்குள்ள தானியக் களஞ்சியத்தின் மூலையில் உறங்குபவனாக அவன் இருந்தான். நான் புறப்பட்டுச் சென்றேன். ”நல்லது இதை இப்படியே விட்டு விட வேண்டியது தான்“ என்று எண்ணினேன். எனவே அந்நாளில் நானும் ஃப்ரெட்டும் மற்றுமுள்ளோரும் கனடாவிலிருந்து திரும்பி வந்தோம். “இந்த ஜனங்கள் எனது செய்தியை செவிமடுக்க விரும்பவில்லையாயின், நல்லது, அவர்கள் செவி கொடுக்க வேண்டாம்” என்று இவ்வாறாக என் மனதில் தீர்மானித்தேன். இப்பொழுது சுமார் 35 ஆண்டுகள் பிரசங்கித்து விட்டேன். அதுவும் கடந்த 15 முதல் 18 ஆண்டு காலமாக, அவருக்கு மிகவும் நெருங்கி ஜீவித்து, அவர் முதலில் எதையும் சொல்லும் வரையிலும் நான் எதுவும் சொல்லாமல் இருக்கிற இப்படிப்பட்ட காரியத்தைத் தவிர வேறு எதையும் நான் செய்யவில்லை. 78மக்கள் கூறுவதாவது — “சகோதரன் பிரான்ஹாம், தான் வருவதாகக் கூறினால், நினைவில் கொள்ளுங்கள், அவருடைய கூட்டத்திற்காக எதிர்பாருங்கள். அவர் கர்த்தருடைய நாமத்தினால் வருகிறார். கர்த்தர் கூறும் வரை அவராக எதுவும் செய்ய மாட்டார்” என்பதாக, அது சரிதான். அவர் எனக்கு எதுவும் கூறும் வரையிலும் நான் காத்திருக்கிறேன். அவர் சொல்லும் வரை நான் அசைவதில்லை. ஆனால் இந்த கடந்த சில மாதங்களாக நான் எங்கு செல்லவேண்டும் என்பதைக் குறித்து அவர் ஒன்றும் கூறுவதேயில்லை . கனடாவிலுருந்து நானும், சகோதரன் பாங்க்ஸும் சகோதரன் ராயும் திரும்பி வந்தோம். நாங்கள் பிரியுமுன்பாக, சகோதரன் ராய் என்னிடம் அந்த சொப்பனத்தைக் கூறினார். அதன் பிறகு, அடுத்த நாள் காலையில், நாங்கள் ராயின் வீட்டிற்குச் சென்றோம். அங்கு அவர் மகன் லின் வீட்டில் இல்லாததால், அவர் எங்களுடன் வர இயலவில்லை . எனவே அவரும் அவரது மனைவியும் மகனுக்காக காத்திருக்கவேண்டியதாயிற்று. அவர் தனது மனைவியை சாஸ்கட்சிவானில் உள்ள ரோஸ்வுட் அல்லது எல்ரோஸ் என்னுமிடத்தில் காரில் ஏற்றிக்கொண்டார். நானும் பில்லியும் சகோதரன் ஃப்ரெட்டின் ட்ரக்கில் வந்தோம். அன்று இரவு முழுவதும் அடுத்த நாளும் கூட நாங்கள் பிரயாணம் பண்ணிக்கொண்டேயிருந்தோம். அதன் பின்பு அடுத்த நாள் காலையில், நாங்கள் மோன்டானாவில் உள்ள ஹெலினாவைவிட்டுப் புறப்பட்டு எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தோம். நான் 9 மணி வரை விழித்திருக்க முடியும், அதன்பின்பு எனக்கு உறக்கம் வந்து விடும். நான் உறங்கச் சென்றேன். பில்லி காலை நேர வெளிச்சம் வரும் வரை 10 மணி வரை உறங்க விரும்புவான். எனவே, இவ்வாறான பிரயாணம் எங்களுக்கு மிகவும் அருமையாக இருந்தது. 79நான் காலை 4 மணிக்கு எழுந்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். அப்பொழுது பில்லி உறங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் ஒரு ஸ்தலத்திற்குள் பிரவேசித்தோம். அப்பொழுது எனக்குள்ளாக, “இந்நாட்களில் ஒன்றில் என் மனைவியை இந்த ஸ்தலத்திற்கு அழைத்துக் கொண்டு வருவேன்”. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அவளுக்கு சொல்ல மாட்டேன். ஆனால் நான் அங்கு சென்று, அதன் பின்பு அவளிடம், “நான் இந்த ஸ்தலத்தை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். நாம் வேறு எங்கும் போக வேண்டாம்; நாம் இங்கேயே தங்கிவிடுவோம்” என்று கூறுவேன் என்று மனதில் சிந்தித்தேன். நாகரிகம் உள்ள எந்தவொரு பகுதியினின்றும் 1100 மைல்கள் அப்பால் உள்ளது இவ்விடம். வனாந்தரமான பகுதி அது. நான் சிந்தித்தேன், “அது நன்றாக இருக்காதா? நான் முடி வெட்டக்கொள்ளத் தேவையில்லை. நான் உடை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. நான் அப்படியே வழக்கமான மலையேறுபவனாகவே இருப்பேன்.” இப்படி இருக்கவே நான் எப்பொழுதும் விரும்பினேன். மேலும் நான் எனக்குள் கூறியதாவது: “என்னிடம் சில துப்பாக்கிகள் உள்ளன. சிலர் அதை எனக்கு கொடுத்துள்ளார்கள். மலையேறுபவர்களுக்கு, இதுவரை நீங்கள் அறிந்திராத வகையில், ஒரு சிறந்த வழிகாட்டியாக ஆவேன். அது எனக்கு மிகவும் விருப்பம். பிறகு கர்த்தர் என்னை கீழே இறங்கிப் போய் யாரிடமாவது எதையாவது கூறும் படி கூறினால் அப்பொழுது, அவர்களிடம் ஓடிப் போய் கர்த்தர் சொன்னவற்றை கூறிவிட்டு, திரும்பி வந்து விடுவேன். நான் இந்த நல்ல ஸ்தலத்தில் இருந்து கொண்டு, அவ்வாறு பட் (Bud) க்கு உதவி செய்வேன்.'' இவ்வாறெல்லாம் நான் சிந்தித்தேன். 80காலையில் 7 மணியளவில் மலையில் இருந்த ஒரு சிறிய சிற்றுண்டிச் சாலைக்கு நாங்கள் சாப்பிடச் சென்றோம். நேரமாகிக்கொண்டிருந்தபடியால், நான் 'பில்லை' எழுப்பினேன். எங்களுடைய வாகனத்தில் இருந்த பெட்ரோல் தீர்ந்துபோய் விட்டபடியால், பெட்ரோல் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் அந்த சிறிய சிற்றுண்டிச் சாலைக்குள் சென்றோம். அங்கு இருந்து கொண்டிருக்கையில், அவ்வீதி வழியாக ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் என்னைவிட சற்று வயது சென்றவன்போல் தோற்றமளித்தான். ஆனால் அவன் ஆண்மைகொண்ட ஒரு மனிதனாக எனக்கு காட்சியளித்தான். அம்மனிதன் ஒரு ஜோடி ஓவராலும், ஓவரால் ஜாக்கெட்டும், சவாரிசெய்தலுக்குரிய பூட்ஸ்க ளும் அணிந்திருந்தான். கருப்புத் தொப்பியுடன், பனிபோல் வெண்மையான கன்னமீசை நன்கு நீண்டு வளர்ந்திருக்க, அவனது தலை முடி, தொப்பியின் வழியாக பின்புறம் தொங்கிக் கொண்டிருந்தது. “அவன் ஆண்மையுள்ள ஒரு மனிதனாக இருக்கிறான்” என நான் எண்ணினேன். அம்மனிதர், தொந்தி விழுந்து, சோம்பேறித்தனமாக, தன் வாயில் நீண்ட சுருட்டை வைத்துக்கொண்டு, அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு முற்றத்திலோ அல்லது நீச்சல் குளத்தினருகோ உட்கார்ந்து கொண்டு தன் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கும் ஒரு கிழக்கத்தியரைப் போல் இருக்கவில்லை. (இவ்விதமான கருத்துக்காக மன்னிக்கவும்). அந்த மனிதனோ கரடு முரடான, கடுமையான மனிதராகக் காட்சியளித்தான், தேவன் மனிதன் எங்கு வாழவேண்டும் என்று உண்டாக்கினாரோ அப்படிக் கொத்தவனாகக் காட்சியளித்தான். நான் அவனை மனதில் பாராட்டிக் கொண்டிருந்தேன். 81அம்மனிதன் அச்சிற்றுன்டிசாலைக்குள் நுழைந்து சில பணியாரங்களைக் கொண்டு வரும் படி பணித்தான். அங்கு 15 அல்லது 20 பேர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவன் பயங்கரமான காட்டுத் தும்மல் போட்டான். (சகோதரன் பிரான்ஹாம் “கெர்ச்சோ ” என்று தும்மிக் காட்டுகிறார் - - ஆசிரியர்) அதினால் காற்று வெடித்தது போல் இருந்தது. அவன் அப்படித் தும்மிய போது ஒருவரும் எதுவும் பேசத் துணியவில்லை . நான் பில்லியிடம், “பில்லி, என் இருதயத்துக்கேற்ற மனிதன் இதோ!” என்று கூறினேன். “ஆ, தந்தையே, அப்படி இருக்கும் படி நீங்கள் விரும்பவில்லையே” என்று அவன் கூறினான். “எதிர்காலத்தில் நான் அப்படிதானிருப்பேன். அது நான் தான்” என்று நான் பதிலளித்தேன். 82நான் சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்தேன். பில் என்னை உற்று நோக்கினான். தனது பணியாரங்களை சாப்பிட்டுக் கொண்டே, நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். சில நிமிடங்களுக்குள், வேறு யாரோ ஒருவன், எங்களுக்கு எதிராக இருந்த சாவடிக்குள் இருந்து எழும்பினான். அம்மனிதன் 75 வயது மதிக்கத்தக்கவனாக இருந்தான். அவன் ஒரு சிறிய மனிதன். அவன் சரியாக எனது முகச்சாயல் உள்ளவனாக இருந்தான். அவனது ஆடைகள் கிழிந்துபோய், அவனது உடம்போடு கட்டப்பட்டிருந்தது அவனோடு எழும்பின அவனுடைய நண்பன் ஃப்ளெட்சர் ப்ராய் தான். நரைத்த முடி முகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பில்லி சுற்று முற்றும் பார்த்துவிட்டு, என்னிடம் “தந்தையே, அவர்கள் இருவரும் உங்களையும், பிளெடசரையும் போல் இருக்கிறார்கள்” என்று கூறினான். நான் அதைப்பற்றி எவ்வாறு உணர்ந்தேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடியும். அந்த சிறிய மனிதன் தள்ளாடுகிறவனாக என்னைப்போல் தோற்றமளித்தான். வெளியில் குளிர்காய்வதற்காக இருக்கும் நெருப்பண்டையில் நின்றதினால், முகமெல்லாம் அவர்களுக்கு புகையாக அழுக்காக இருந்தது. அவரிருவரும் சேர்ந்து காலைச்சிற்றுண்டி சாப்பிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு கோப்பை காபி அருந்துவதற்கு, அவரிவருக்கும் அம்மனிதன் இருபது செண்டுகள் செலுத்தியிருக்க வேண்டும். என் இருதயம் துடித்தது. நான் அவர்களைக் கவனித்தேன். பில்லி, “உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று என்னிடம் கேட்டான். “ஒன்றுமில்லை ” என நான் கூறினேன். அவர்கள் புறப்பட்டு வெளியேறினார்கள். பில்லி என்னிடம், “தந்தையே என்ன விஷயம்” என்று வினவினான். “ஒன்றுமில்லை ” என நான் கூறினேன். அவன் காருக்குச் சென்றான். “நீங்கள் மீண்டும் காரை ஓட்டுகிறீர்களா?” என்று அவன் கேட்டான். “இல்லை ” என்று நான் கூறினேன். “நான் இன்னும் உறக்கமயக்கமாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான். 83எனவே பில்லி உறங்கச் சென்று விட்டான். நான் ட்ரக்கை மணிக்கு 55 மைல் வேகத்தில் வேகப்படுத்தி, மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தேன். அரிசோனாவை நோக்கி வீடு திரும்பும் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஊடா என்ற இடத்திற்கு வந்தேன். அப்பட்டணத்தை விட்டு இருபது மைல்கள் தாண்டி மலையைவிட்டு வாகனத்தில் கீழே இறங்கிக் கொண்டிருக்கையில் இப்பொழுது என்னுடையை சப்தத்தை நீங்கள் தெளிவாக கேட்கும் வண்ணமாக ஒரு சப்தம் எனக்கு கேட்டது. அணில்கள் மற்றும் சம்பவங்களைப் பற்றி நான் கூறுகையில் எவ்வாறு அந்த சப்தம் கேட்டது என்று நான் கூறியிருக்கிறேன். ஒருக்கால் அது பயத்தினால் ஏற்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சரியானதல்லாத ஏதாவதொன்றை நான் உங்களுக்கு எப்பொழுதாவது கூறியதுண்டா? அந்த சப்தம் என்னோடு பேச ஆரம்பித்தது. அது “உனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள். நீ அவ்வாறே இருப்பாய்” என்று கூறியது. “ஆண்டவரே நான் அவ்வாறிருக்க விரும்பவில்லை” எனக் கூறினேன். “உன் மனைவியும் போய்விடுவாள். அவள் இம்மாதிரியான மலைகளில் வாழ விரும்பமாட்டாள். சொப்பனம் நீ எவ்வாறு ஒரு தேசாந்திரியாக ஆவாய் என்று காண்பித்ததோ, அவ்வாறே நீ ஆவாய்” என்று அவர் கூறினார். “அவ்வாறு வாழ நான் விரும்பவில்லை , அவ்வாறு வாழவும் எனக்கு அவசியமில்லை . நான் வேறுவிதமான காரியத்தையே செய்ய விரும்புகிறேன். நீர் என்னை ஒரு தீர்க்கத்ரிசியாக இருக்கும் படி அழைத்திருக்கிறீர் என்று எனக்குச் சொல்லப்பட்டது. தீர்க்கதரிசியைப் போல் நான் வனாந்திரத்தில் வாழ விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். நான் வேட்டையாட முடியும் என்ற காரணத்திற்காக, எனது சொந்த நலனை உத்தேசித்து, இத்தகைய சாக்குப்போக்கை கூறினேன். அவர் கூறினார். “ஆனால் அப்படி ஜீவித்தவர்கள், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளாவர். அதைவிட மேலான தொரு ஊழியத்திற்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்.” அவர் மேலும், “அதுவுமின்றி மேற்கொண்டு உனக்கு அதிக வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வியாதியஸ்தருக்காக ஜெபித்து, சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கும்படி நீ அழைக்கப்பட்டிருக்கிறாய். மேலும் அப்போஸ்தல ஒழுங்கின்படி,மேன்மையான காரியங்களைப் பற்றியும், அநேக வரங்களைப் பற்றியும் நீ அறிவாய். நீ அசைவதற்காக உன்னை அசைக்கும் படி ஒவ்வொரு தடவையும் ஏன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? உனது வரம் எங்கே? நான் நேற்று உன்னிடம் கூறினது நினைவில் உள்ளதா? சகோதரன் ராய் ராபர்ஸன் தமது சொப்பனம் அல்லது தரிசனத்தில் கண்டு கூறியவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா? நீ மோசேயைப் போல் கிரியை செய்தாய் என்பதை அவர் கண்டு கூறினாரல்லவா? உனது ஜனங்களின் மேல் நீ வைத்திருந்த அனுதாப உணர்வை நீ மறந்து விட்டாய். நான் உன்னை அழைத்த அழைப்பை நீ மறந்து விட்டாய்” என்று கூறினார். போலும், ஃப்ரெட்டைப் போலும் காட்சியளித்த அந்த இருவரையும் கண்டது ஞாபகமிருக்கிறதா? நீ டூசானுக்குப் போகும் போது, அம்மாவிடம் இதைப்பற்றிக் கேள். நான் அவளிடம் இந்தச் சொப்பனத்தைக் கூறியுள்ளேன். பில்லி, ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று என்னுடன் பேசி கொண்டிருந்தது. அது நீ தானோ என நான் எண்ணினேன்“ என்று அவனிடம் கூறினேன். 84. 85. 86அவன் என்னை சற்று விசித்திரமாக உற்று நோக்கி விட்டு, சற்று தாமதித்து, பிறகு மீண்டும் உறக்கத்திலாழ்ந்தான். நாங்கள் தொடர்ந்து வண்டியில் சென்று கொண்டிருந்தோம். அதின் அர்த்தம் என்னவாயிருக்கும், என்று சிந்தித்துக் கொண்டே நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். சாலையில் அவ்வாறு வாகனம் போய்க்கொண்டிருக்கையில், திடீரென்று மீண்டும் அந்த சப்தம் என்னோடு பேசியது. அவர் கூறினார், “திரும்பு, ஆதியிலே நான் உன்னிடம் சுவிசேஷகனுடைய வேலையைச் செய் என்று கூறவில்லையா? நதிக்கரையில் உன்னை நான் அழைத்தபோது, நான், உன்னிடம், ”யோவான் ஸ்நானன் முதலாம் வருகைக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டது போல்...“ என்று நான் உன்னிடம் கூறவில்லையா? யோவான், தீர்க்க்தரிசியை விட மேன்மையுள்ளவன் இல்லையா?” இயேசு தாமே கூறினார்: “வனாந்திரத்தில் யாரைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ......தீர்க்கதரிசியைவிட மேலானவன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” - லூக் 7:26 87பின்பு இந்த விஷயங்களெல்லாம் எனது நினைவிற்கு வந்தன. நான் அதிசயிக்க ஆரம்பித்தேன். பிறகு அவர் மக்களைப் பற்றி எனக்கு மீண்டும் ஞாபகப் படுத்தினார். மோசே வனாந்திரத்தில் இருந்து கொண்டு, எவ்வாறு மக்களைப் போய் அடைய முடியும்? அது போலவே, நான் விரும்பியபடி வனாந்திரத்தில் இருந்துகொண்டு, எவ்வாறு மக்களை அணுக முடியும்? பிறகு தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபம் 4ம் அதிகாரம்.... (உங்களில் ஆதியிலிருந்து இருந்தவர்கள்) 30 ஆண்டுகளுக்கு முன்பாக சபையை பிரதிஷ்டை செய்கையில், அக்காலையில், அவர் எனக்குக் காண்பித்த அவ்விரு மரங்களை நான் இரு புறத்திலும் நட்டேன் அல்லவா? அத்தரிசனத்தை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா? அவைகளெல்லாம் புத்தகங்களிலும், டேப்புகளிலும் அடங்கியுள்ளன. அநேகமாண்டுகளுக்கு முன்பாக பார்த்த அக்காரியத்தை, நான் ஒரு போதும் கடக்கவில்லை. திரித்துவத்தின் பக்கமோ, அல்லது ஒருத்துவத்தின் பக்கமோ நான் சாயவில்லை. நான் அவைகள் நடுவே நின்று, அம்மரங்களை நட்டேன். கனிகளைத் தரும் மரங்களாக அவைகள் மாத்திரமே இருந்தன. எல்லா மரங்களும் முப்பது அடி உயரம் மாத்திரமே வளர்ந்து, பிறகு அத்துடன் வளர்ச்சி நின்று போய் விடுகிறது. ஆனால் அவ்விரு மரங்களும், நேராக பரலோகத்திற்கு வளர்ந்து சென்றன. அவைகளை ஒரே கிளையினின்று நான் முறித்தேன். ஒரு பக்கத்தில் ஒன்றும் மற்றொரு பக்கத்தில் இன்னொன்றுமாக அவை இருந்தன. அவைகளை நான் முறித்தேன். அந்த தரிசனம் உங்கள் ஞாபகத்திலுண்டு. அவைகள் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன. எனது ஜீவிய சரித்திரத்திலும் அது அடங்கியுள்ளது. அவ்விருமரங்களும் நேராக வானளாவி வளர்ந்து பரலோகத்திற்குள் சென்றன. ஆண்டவர் என்னிடம், “அவற்றின் கனியைப் பறிக்கும்படி உன் கரத்தை நீட்டு” என்று கூறினார். நான் அங்கே ஓடிய போது, அதே கனியைத்தான் நான் சிலுவையில் கண்டேன். அவர் கூறினார், “சுவிஷேசகனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று. அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்திற்கு செவி கொடுக்க மனதில்லாமல் போகப் போகிற வேளை வரும். அவர்களை விட்டு விலகாதே. தொடர்ந்து போய்க் கொண்டேயிரு” என்று. இவை யாவும் என் நினைவுக்கு வந்தது.-2 தீமோ 88மார்லின் மன்றோ இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவள் மரித்ததைக் கண்டேன். அவள் தற்கொலை செய்து கொள்ளாதபோது, அவர்கள் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று அறிவித்தார்கள். அது எவ்வாறு சம்பவிக்கும் என்று அதை நான் அவர்களுக்கு அப்படியே முன் கூட்டியே சொன்னேன். அந்த குத்துச் சண்டைக்காரர்கள் பற்றி நான் கூறியது போலவே சம்பவித்தது. அவர்களில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுவார் என்று நான் கூறினேன். நான் பிசகாக அந்தப் பெண் மார்லின் மன்றோ என்று கூறிவிட்டேன். அது வேறொரு பெண்ணாகும். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் ஒரு பாப்டிஸ்ட். அவர் பெயர் டேனி ஹென்றியாகும். அவள் பெயர் என்ன? ஜேன் ரஸ்ஸல். நான் லாஸ் ஏஞ்ஜெலிஸில் வியாபாரிகள் காலைச் சிற்றுண்டியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அங்கே அசெம்ப்ளி ஆஃப் காட் சபையின் தலைவரும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கூடி வந்திருந்தார்கள். நான் பேசி முடித்தபிறகு, மேடையை விட்டு புறப்படுகையில்... ஏனெனில் அச்செய்தியானது ரேடியோவில் தேசம் பூராவும் ஒலிபரப்பப் படுவதாக இருந்தது. நான் அப்பொழுது க்ளிஃப்டன்ஸில் இருந்தேன். அங்கு தான் காலை சிற்றுண்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கே எங்களுடைய காலைச் சிற்றுண்டி உண்டாயிருந்தது. நான் அவ்வாறு, மேல் பிரசங்க பீடத்திலிருந்து கீழ்ப்பீடத்திற்கு இறங்கி வருகையில் முப்பது வயது மதிக்கத்தக்க அழகானதொரு வாலிபன் ஓடி வந்து தனது கரங்களால் என்னைத் தழுவி அணைத்துக்கொண்டார். அவர் “நான் தான் டேனி ஹென்றி” என்று கூறினார். அவருடைய சகோதரர்தான் கிறிஸ்தவ வியாபாரிகளுக்காக டெலிவிஷன் ஒலிபரப்பும் காரியத்தைச் செய்கிறார் என்று நான் அறியவில்லை. (டேனி ஹென்றியின் ஒன்று விட்ட சகோதரிதான் அந்த சினிமா நடிகை ஜேன் ரஸ்ஸல் ஆவார். அவருடைய தாய் ஒரு பெந்தேகோஸ்தே பிரசங்கியாவார்). 89அவர் அவ்வாறு என்னை நோக்கி ஓடி வந்து, என்னைச் சுற்றி தனது கரங்களால் அணைத்துக்கொண்டு, “தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் பிரான்ஹாமே, நான் இப்பொழுது சொல்லப்போவது தேவதூஷணமாக தொனிக்காது என்று நம்புகிறேன். என் அபிப்பிராயப்படி, நீங்கள் பிரசங்கித்த அச்செய்தியானது வெளிப்படுத்தின விசேஷத்தின் 23ம் அதிகாரமாயிருக்க முடியும்” என்று கூறினார். அவர் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கையில், உடனே அன்னிய பாஷையில் பேச ஆரம்பித்தார். ஸ்தாபன ரீதியாக பாப்டிஸ்டாக இருந்த அவன் ஒரு போதும் அன்னிய பாஷையில் பேசுதலாகிய அப்படிப்பட்ட காரியத்தை கேள்விப்பட்டேயிருக்கவில்லை. அவர் அவ்வாறு அன்னிய பாஷையில் பேசியதும் என்னைப் பார்த்தார். அவர் முகம் வெளிறி விட்டது. அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கே உட்கார்ந்திருக்கும் சிலர் அப்பொழுது அங்கிருந்தனர். ஃப்ரெட் நீங்கள் அங்கு இருந்தீர்களா? எத்தனை பேர்கள் அங்கு அவ்வேளையில் இருந்தீர்கள்? ஆம், இங்குள்ள மூன்று பேர்கள் அங்கு அவ்வேளையில் இருந்தீர்கள். அன்னிய பாஷை பேசின அந்த மனிதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கே அப்பொழுது ஒரு கனம் பொருந்திய ப்ரெஞ்ச் மாது ஒருவர் வீற்றிருந்தார்கள். அவர்கள் எழும்பி, “அவர் பேசியதற்கு எந்த வித வியாக்கியானமும் தேவையில்லை. அது சுத்தமான பிரெஞ்சுமொழியாகும்” என்று கூறினார்கள். அந்தப் பையன் கூறினார், “ப்ரெஞ்சில் எனக்கு ஒரு வார்த்தைகூடத் தெரியாது'' என்று. அம்மாது அவர் கூறினவை யாவையும் எழுதி எடுத்திருந்தார்கள். அப்பொழுது அங்கே மூலையில் வேறொருவர் உட்கார்ந்திருந்தார். அவர், “அது சரியானதுதான். அவர் கூறியவை யாவையும் நானும் எழுதி எடுத்திருக்கிறேன். அது ப்ரெஞ்சு மொழியிலுள்ளது” எனக் கூறினார். மிகவும் பின்னால் சுவரோரமாக உட்கார்ந்திருந்த பழுப்புநிற தலைமுடி உள்ள அழகான ஒரு மனிதன் எழும்பி முன்னுக்கு வந்து அவர்களுடைய குறிப்புக்களை தம்முடையவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அவர் ஐக்கிய நாடுகள் சபையில் ப்ரெஞ்ச் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர். இவரது பெயர் விக்டர் லாட்யூ (Victor LaDeaux) என்பதாகும். இவர் அர்னே விக் என்பவரின் சபையைச் சேர்ந்தவர். அவர் அதை எழுதிக் கொடுத்தார். அதினுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது. 90நான் இதை வாசிக்கிறேன், கேளுங்கள். “விக்டர் லாட்யூ ஆகிய நான், ப்ரெஞ்ச் இனத்தைச் சேர்ந்தவன். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன். பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டவன். எனது முகவரி, 809. நார்த் கிங் ரோட், லாஸ் ஏஞ்ஜெலிஸ், 46. நான் அர்னேவிக் என்பவரைப் போதகராகக் கொண்டுள்ள பெத்தேல் டெம்பிள் சபையைச் சேர்ந்தவன். 1961-ம் ஆண்டு பெப்ரவரி 11ம் தேதியன்று, பூரண சுவிசேஷ வியாபாரிகளின் காலைச் சிற்றுண்டியில் டேனி ஹென்றி என்பவரால் சகோதரன் பிரான்ஹாமுக்கு, ப்ரெஞ்ச் மொழியில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை நான் அறிவிக்கிறேன்.” அம்மொழி பெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “குறுகிய, கடினமான பாதையை நீ தெரிந்து கொண்டிருக்கிற படியால், உனது தேர்வின் படியே (choice) நீ நடந்து சென்றிருக்கிறாய். (இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மோசேயும் தனது தேர்வைச் செய்ய வேண்டியவனாக இருந்தான்). துல்லியமான, சரியான வழியை நீ தெரிந்து கொண்டிருக்கிறாய்; அது என்னுடைய வழியாயிருக்கிறது. (அடியில் கோடிடப்பட்டிருக்கிறது. “எனது வழி” என பரிசுத்தாவியானவர் மீண்டும் பேசினார்). முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மானத்தினிமித்தமாக பரலோகத்தின் பெரும்பகுதி உன்னை எதிபார்த்துக் கொண்டிருக்கிறது. என்னே! மகிமையானதொரு தீர்மானம்! (இப்பொழுது கவனமாக கேளுங்கள்) என்னே மகமையானதொரு தீர்மானத்தை நீ செய்திருக்கிறாய். நிறைவேறுவதான இத்தீர்மானத்தில், தன்னில் தானே மிகப் பெரிய வெற்றியைத் தெய்வீக அன்பில் அது கொண்டு வரக் கூடியதாயிருக்கிறது.“ 91அது வினையுரிச் சொல்லுக்கு முன் உள்ள வினைச் சொல்லாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஐ.நா. சபையின் ப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பாளர் அதை மொழிபெயர்த்துக் கொடுத்தார். அந்தப் பையனுக்கு ப்ரெஞ்சில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது. அன்னிய பாஷையில் பேசுவது என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. அவர் ஒரு பாப்டிஸ்ட்டு சபையைச் சேர்ந்தவர். தற்செயலாக அவர் அங்கே உள்ளே நுழைந்து அங்கே இசைத்துக் கொண்டிருந்த இசையைக் கேட்டு விட்டு, பின்பு நான் அங்கு வந்து நின்று பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறார். 92“தெய்வீகமான அன்பில்” —- அது பரிசுத்தாவியாக இல்லாவிடில் அது எப்படி தெய்வீக அன்பாக இருக்கக் கூடும்? பரிசுத்தாவியே தெய்வீக அன்பாக இருக்கிறது. இவ்வாறு நானும் பில்லியும் வாகனத்தில் போய்க் கொண்டிருக்கையில் பில்லி மறுபடியும் உறங்கச் சென்று விட்டான். அந்த சப்தமானது, “நான் உனக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று கூறியது. நான் சிறிது நேரம் காத்திருந்தேன். ஒன்றும் நடைபெற வில்லை. நான் கேட்டேன் “ஆண்டவரே? நித்திய அடையாளமாவது என்ன?” என்றேன். சில நிமிடங்கள் நான் காத்திருந்தேன். அதன் பிறகு, பில்லியைப் பார்த்தேன், அவன் உறக்கத்திலிருந்தான். அவர் கூறினார், “நான் உனக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று. அவர் மீண்டும் கூறினார். “நீ இருக்கிற இடத்திலிருந்து மேற்கு நோக்கிப் பார்” என்பதாக. மேற்கு நோக்கிப் பார்ப்பதற்காக நான் ட்ரக்கில் இருந்து என் தலையைத் திருப்பிப் பார்த்தேன் (வாகனத்தை மெதுவாக ஓட்டினேன்). அங்கே... கர்த்தருடைய ஆவியானவர், ஓ! கதறி சப்தமிட வேண்டும் போல் எனக்கு இருந்தது. நான் பார்த்தபோது, வெண்மையான பனியினால் மேல் மூடியிடப் பட்டிருந்ததொரு மலையை கண்டேன். “எனக்கு ஒன்றும் தெரிய வில்லை ... அதில் எந்தவொரு நித்திய அடையாளத்தையும் நான் காணவில்லையே,” என்று கூறினேன். அவர், “உனது பெயர் அதில் எங்கும் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார். “ஓ, அது என்ன?” என்று நான் எண்ணினேன். நான் மிகவும் பலவீனமடைந்து, வண்டியை நிறுத்த ஆரம்பித்தேன். பில்லி எழும்பி, “உங்களுக்கு என்ன நேரிட்டது” என்று வினவினான். நான் கரங்களை இவ்வாறு தொங்கவிட்டேன். எனது கரங்களிலிருந்து வியர்வை சொட்டியது. 93“பில்லி, ஏதோ ஒன்று சம்பவித்துக்கொண்டிருக்கிறது. நான் எங்கே தவறிழைத்தேன் என்பதை உடனடியாக அறிந்து கொண்டேன். நான் தேவனுக்கு தவறிழைத்து விட்டேன் என்று அறிவேன்” என்று அவனிடம் நான் கூறினேன். பின் வரும் பாடல் பாடுவதை நான் கேட்பது போல் எனக்குத் தோன்றியது. பலவிதமான மக்கள் நொண்டி, முடம், குருடு, உடல் சூம்பிப்போனவர் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நான் கண்டேன். பிரசித்தி பெற்ற ஒரு பாடல்குழுவினர் இப்பாடலைப் பாடுவதைக் கேட்டேன். அசுத்தம்! அசுத்தம்! அசுத்தாவிகள் அவனைத் துரத்தின (நீங்கள் அந்தப் பாடலை அறிவீர்கள்) இயேசு வந்து அந்த சிறைப்பட்டவனை விடுதலையாக்கினார். வியாதியஸ்தர்களின் வரிசைகளை நான் எவ்விடத்திலும் பார்த்தேன். நான் வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று. பில்லி என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்பதை அறியாதவனாயிருந்தான். நான் மேலே நோக்கிப் பார்த்தேன். 94நான் வண்டியை நிறுத்தி மேல் நோக்கின போது, ஏழு சிகரங்களுள்ள அந்த மலையை பார்த்தேன். “முக்கியமானதொன்றைக் காண விரும்புகிறாயா?” என்று கூறின ஒரு சத்தத்தைக் கேட்டேன். அம்மலையின் மேல் ஏழு சிகரங்கள் இருந்தன. அந்த ஒரு மலை பல மைல்கள் தூரம் வியாபித்திருந்தது. அதற்கு பிறகு மலைகளே கிடையாது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதின் உச்சியின் மேல் பனி மூடப்பட்டிருந்தது. முதல் இரண்டும் சிறிய சிகரங்களாயிருந்தன. பிறகு ஒரு பெரிய சிகரம். அதன் பிறகு வேறொரு சிறிய சிகரம், அதற்கப்பால் ஒரு பெரிய சிகரம். அதற்கப்பால் ஒரு சிறிய சிகரம், அதன் பிறகு ஒரு நீண்ட பெரிய பனி மூடிய மலை, “ஆண்டவனே, அதின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று நான் கூறினேன். “அங்கே எத்தனை சிகரங்களுள்ளன?” என்று என்னைக் கேட்டார். நான் “ஏழுசிகரங்கள்” என்று கூறினேன். உனது பெயரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன? என்று வினவினார். ஆங்கிலத்தில் B-r-a-n-h-a-m—-M-a-r-r-i-o-n என்று ஒவ்வொரு பெயரும் ஏழு எழுத்துக்கள் உள்ளதாக இருக்கிறது. 95அங்கே தனிச்சிறப்பு வாய்ந்த மூன்று சிகரங்களிருந்தன. “அம்மூன்று சிகரங்களும், முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இழுப்புகளாம். அந்த முதலாவது சிகரம் உனது ஊழியத்தின் முதலாம் பாகமாயிருந்தது, பின்பு ஒரு சிறிய மலை, உனது முதலாம் இழுப்பு நல்ல உயரமாயிருந்தது” என்று அவர் கூறினார். கையில் தோன்றும் அந்த அடையாளம்'' உங்களுக்குத் தெரியுமல்லவா? அதன் பிறகு சற்று இடைவெளி உண்டாயிருந்தது. நான் அதிக களைப்புறாதபடி, இளைப்பாறின நேரமது. உங்களில் அநேகருக்கு ஞாபகமிருக்கும். அதன் பிறகு இரண்டாம் இழுப்பாகிய பகுத்தறிதல் வரம் வந்தது. இப்பொழுது சில ஆண்டுகளாக எனக்கு ஓய்வு உள்ளது போன்று காணப்படுகின்றது. அதற்கு தான் அந்த சிறிய சிகரங்கள் ஒப்புமையாய் இருக்கின்றன. எனது ஊழியம் முடிவு பெறவில்லையெனக் கருதி நான் திரும்பி பார்க்கிறேன். அதன் பிறகு மூன்றாம் இழுப்பானது வருகிறது. மூன்று என்னும் எண் முடிவான எண்ணாயிருக்கிறது. அடுத்த சிகரம் கிருபையின் எண்ணாகக் கருதப்படுகிற ஐந்து ஆகும். அதன் பின்பு, உள்ள சிகரம் பூரணத்தின் எண்ணாக உள்ள ஏழு ஆகும். “ஆறு நாட்கள் நீ வேலை செய்து வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பாயாக! அது காலத்தின் முடிவாயிருக்கிறது”. நான் நின்று, பில்லியிடம் அவைகளைக் காண்பித்து, அவைகளை உற்று நோக்கினேன். - யாத் 20:9,10 உபா 5:13,14 மேலும், ஆண்டவர் கூறினார், “அது உன் மனதில் நிலைத்திருக்கட்டும். எப்பொழுதாவது உன் மனதில் சந்தேகம் உண்டானால், இந்த இடத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு, இங்கு திரும்பிவா” என்று சொன்னார். 96அப்பொழுது பில்லி என் தோளில் தட்டி, “தந்தையே, கிழக்கே பாருங்கள்” என்று கூறினான். அது எவ்வாறு சம்பவித்ததோ நான் அறியேன், சாலையின் கிழக்குப் பாகத்தில், அங்கே குப்பை, செத்தைகள் திடீரென எரிந்து கொண்டிருந்தன. எந்தவொரு நகரத்திற்கும், பல நூற்றுக்கணக்கான மைல்களுக்குப்பால் உள்ள அந்த இடத்தில், அந்த குப்பைகூளங்கள், சாலையின் இடது பக்கம் எரிந்து கொண்டிருந்தன. நான் ஊழியக்களத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஆமென். வயோதிபமோ, வாலிபமோ எப்படியாயினும் மரணம் என்னை விடுவிக்குமளவும் நான் தேவனுக்குக் கீழ்ப்படிவேன். நான் கர்த்தருடைய காரியங்களில் தவறி விட்டேன், வேண்டுமென்று அல்ல.... இவ்விஷயத்தை இங்கு கூற நான் விரும்புகிறேன். எந்தவித தோஷமுமின்றி, இயேசுகிறிஸ்து பிரத்தியட்சமாகும்படி நான் விரும்புகிறேன். இத்தனை ஆண்டு காலமாக, சொல்லப்பட்ட எந்தவொரு விஷயமும் அப்படியே நிறைவேறியிருக்கிறதேயல்லாமல், முன்னுரைத்த எதுவும் நிறைவேறாமற் போகவில்லை . ஆயிரக்கணக்கில் என்ன சம்பவிக்கும் என்பதைப் பற்றிய முன்னுரைத்தல்கள், மற்றும் இருதயத்தின் சிந்தைகளை பகுத்தறிந்து சொல்லுதல் ஆகியவைகள் பிரசங்க பீடத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன, கூறினவாறே அவை நிறைவேறவில்லை என்று நிருபிக்க முடியுமா என்று நான் சவால் விடுகிறேன். ஒவ்வொரு எழுத்தின்படியும் அவைகள் நிறைவேறின. சபையானது அதை விசுவாசிக்குமெனில், “ஆமென்'' என்று சொல்வீர்களாக. (சபையார் ”ஆமென்“ எனக் கூறுகிறார்கள் - ஆசிரியர்) இவ்வுலகத்தில் அவைகளை மறுத்துரைக்க ஒருவரும் இல்லை. கிரியை செய்யும்படி ஒரு மனிதனை தேவன் உந்தித்தள்ளுகிறாரென்றால், அப்படியிருந்தும் அவனுக்கென்று தேவன் பேசும்வரை அவன் அசையாமல் இருப்பானென்றால் அக்காரியத்தில் விசுவாசம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தேவன் தான் உன்னை ஒரு காரியத்திற்கு தள்ளிவிடுகிறார். ஒரு மனிதனும் ஊழியத்திற்கெதிராக ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாதபடி ஊழியமானது அவ்வளவு வளர்ந்துள்ளது. ஆனால் இது முதற்கொண்டு, நீங்கள் செவி கொடுக்குமுன்னர், நான் முதலில் கர்த்தருடைய நாமத்தினால் உங்களோடு பேசட்டும். ஏனெனில், நான் விசுவாசத்தினால் புறப்பட்டு செல்ல வேண்டும். அது சரி அல்லது தவறு என்று எப்படி எண்ணியபோதிலும் நான் அதை விசுவாசத்தினால் செய்ய வேண்டும். எது சரியென்று நான் எண்ணுகிறேனோ அதை என்னால் இயன்றவரை சிறப்பாக செய்ய விழைவேன். இதுவரை அவர் என்னிடம் போய் செய்யும்படி சொல்லுகிற வரையிலும் நான் காத்திருந்து செய்தபடியால், அதில் தவறே இருக்கவில்லை. நான் அவருக்காக காத்திருந்தேன். எனவே அது நானல்ல, அவரேதான்! 97ஆனால் பாருங்கள், மகத்தான பரிசுத்த பவுல் கூட ஒரு சமயத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அநேக சமயங்களில் தேவன் தனது ஊழியக்காரர்கள் பிசகான காரியங்களைச் செய்ய அனுமதித்து விடுகிறார். இவற்றை நிரூபிப்பதற்காக, மானிடர் தவறுகள் செய்யக் கூடும். ஆனால் தேவனோ தவறு செய்யவே மாட்டார். ஆனால் இப்பொழுது நான் ஊழியக்களத்திற்கு பிரசங்கங்களுக்காக செல்வேனானால் இப்பொழுதுள்ள என் தீர்மானத்தின் படி நான் முன்னதாக கூட்டங்களை ஒழுங்கு செய்ய வேண்டியதாயிருக்கும். ஒருக்கால், நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற அந்த மகத்தான வேளை வருவதற்குரிய சமயம் இதுவாயிருக்கலாம். அப்படியானால் நிச்சயமாக இது தன்னில் தானே மகத்தானதாக, மகத்தான வெற்றியை தேவ அன்பில் கொண்டு வருவதாக இருக்கும். (வினையுரிச்சொல்லுக்கு முன் உள்ள வினைச்சொல்) அப்பொழுது அது, தெய்வீக அன்பாகிய தேவனாகவேயிருக்கிறது. மக்களுக்காக இடைவெளியில் நிற்கும்படி முன்னால் ஓடி இடைவெளியில் நிற்பதற்கு தேவனுடைய அன்பே அவசியமாயுள்ளது. 98'ரிக்கீஸ், மற்றும் ரிக்கெட்டாஸ்' என்று சில மக்களைப் பற்றி நான் கொஞ்சம் இகழ்ச்சியாகக் குறிப்பிடுவதுண்டு. அவர்களில் அநேகர் இன்னும் தேவபிள்ளைகளாக இருப்பதால், நான் அவ்வாறு அவர்களைப் பற்றி குறிப்பிடக்கூடாது என்று தேவன் எனக்கு உணர்த்தினார். அவர்கள் வேறு விதமாக நடந்து கொள்ளுகிற படியினால் அவர்களால் தங்களை சரி பண்ணிக் கொள்ளமுடியவில்லை. குளிர்ந்து போன சடங்காச்சாரச் சபைகள் அப்படிப்பட்ட மக்களைக் கொண்டுள்ளன. அந்த ஆவி அவர்கள் மேல் இருக்கிறது. இஸ்ரவேலரை விடுவிக்கும்படி மோசே எகிப்துக்குச் சென்றபோது அவர்கள் எவ்வாறு எகிப்து என்னும் சிறையில் இருந்தனரோ, அதே நிலையில் இவர்களும் உள்ளனர். இயேசுகிறிஸ்துவை நேசிக்கிறவர்கள், அவரை என்னவிதமாக சேவிக்கவேண்டுமென்று அறிந்திருந்தார்களேயானால், அவ்விதமாக அவரை சேவிப்பார்கள். ஸ்தாபனத்தின் கட்டுகளில் அவர்கள் சிக்குண்டு போயிருக்கிறார்கள். அந்த ஸ்தாபனங்கள் அவர்களிடம் “இதைச் செய், அதைச் செய்யாதே” என்று கூறுகிறது. 99“வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து வர விரும்புவோர் அணி வகுத்து வருவீராக” என்ற தேவ அழைப்பு வந்தாக வேண்டும். நாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குப் போகிற பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். ஆமென். அவர்கள் அணிவகுத்து வரட்டும். இக்கடைசிக் காலத்தில் நாம் கிறுஸ்துவைச் சந்திப்பதற்கென பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் உத்தமமாயிருப்பினும், அவன் தவறு செய்யவும் கூடும் என்பதை உங்களுக்குக் காண்பிக்கவே இதை உங்களுக்கு அறிவிக்க விரும்பினேன். மோசே தன் ஜனங்கள் தனக்கு செவி கொடாமலிருந்ததால் அவர்களைப் பற்றிய உணர்வை இழந்தே போய்விட்டான். சகோதரன் ராய் அவர்களே! நீங்கள் அந்த சொப்பனத்தைக் கண்டீர்களல்லவா? நான் என் இருதயத்தில் அந்த விதமான ஊழியத்தைப் பற்றி வித்தியாசமாக உணராதவரை என்னால் அவ்விதமானதொரு ஊழியத்தை செய்ய முடியாது. தேவனே கூறினாலும் சரி, அந்த மாற்றம் வருகிறதைப் பற்றித்தான் சகோதரன் ராய் கண்டார் (அது இப்பொழுது என்னிடம் வந்திருக்கிறது) ஏதோ ஒன்று என்னை மாற்றவேண்டும். இப்பொழுது என் உள்ளத்தில் இருக்கிற அதே உணர்வோடு — அதாவது நான், இன்னமும் அவர்கள் செய்திக்கு செவி கொடுத்திருக்கத்தான் வேண்டும். அவர்கள் இதைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேனல்லவா — அவர்களிடம் சென்றால் அந்த மக்களுக்காக எனக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் என்னிடம் இல்லை என்று அர்த்தமாகிறது. அந்தவிதமான உண்ர்ச்சி எனக்கு இல்லாத வரை நான் போவதில் அர்த்தமில்லை . ஏனெனில், அப்படி நான் போவேனாகில் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன். 100இத்தனை ஆண்டுக்காலமும், நான் அவரை உண்மையான இருதயத்தோடு சேவிக்க முயற்ச்சித்துள்ளேன். நான் மாய்மாலக்காரனாக அங்கு போக விரும்பேன். அவர்கள், “ரிக்கி”, “ரிக்கெட்டா” இல்லை என்று நான் உணர வேண்டும். அவர்களும் தேவனுடைய பிள்ளைகள் என்றும், அவர்கள் கட்டுகளில் இருப்பதால்தான் அப்படியிருக்கிறார்கள்; நான் அவர்களிடம் அவர்களை விடுவிக்கப் போக வேண்டும் என்றதான உணர்வு முதல் எனக்கு வர வேண்டும். அவ்விதமான உணர்வு எனக்கு வராதவரை, வெறுமனே நான் திரிந்துகொண்டிருக்கத்தான் வேண்டும். சில கன்வென்ஷங்களில் பிரசங்கித்து விட்டு அதற்காக காத்திருக்க வேண்டும். 101என்னிடம் ஒரு சிறிய பாடல் உள்ளது. அதை என்னால் பாடமுடியாது. அதை நான் உங்களிடம் வெறுமனே வாசித்துக் காட்டுவேன். (சகோ. நெவில் அவர்களே, அது சரியாக எழுதப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்) நான் அதை சரியாக எழுதவில்லை. அதை நான் படிக்கவாவது முடியுமா இல்லையா என்று தெரியவில்லை . “குடியரசின் யுத்தப் பாடல்” இராகத்தில் அது அமைந்துள்ளது. மகிமை, மகிமை, அல்லேலுயா! (நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்கள்) மகிமை, மகிமை, அல்லேலூயா! (உங்களில் எத்தனைபேர் - நாமெல்லாருமே இப்பாடலைக் கேட்டிருக்கிறோம்) தேசாந்திரியானதோர் பிரசங்கி தன் தோளில் துப்பாக்கியோடும், கையில் வேதாகமத்தோடும் தேசந்தோறும் குதிரைமேல் சுற்றித்திரிந்து, புல்வெளி வாழும் மாந்தரிடம் ஆசிர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்த தேசம் பற்றி பிரசங்கித்தார், எங்கும் பாடிக்கொண்டே சென்றார். சார்ந்து இருப்பேன் - சார்ந்து இருப்பேன், நித்திய புயத்தில் சார்ந்திருப்பேன் சார்ந்து இருப்பேன், சார்ந்து இருப்பேன் நித்திய புயத்தில் சார்ந்திருப்பேன். நியாயத்தீர்ப்பு அக்கினி கந்தக மழையும் நீதியுள்ளவர்க்கு மகிமை நித்திய பரலோகம் எனவும் பிரசங்கித்தார், மலைகள் தோறும், அவர் இக்கீதம் பாடிக் குதிரைமேல் சென்றார். வல்லமையுண்டு, உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தால், வல்லமை உண்டு, உண்டு, அற்புத வல்லமை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால். 102முதிர்வயதான தேசாந்திரியான பிரசங்கி. நீங்கள் அவரை நினைவில் கொண்டுள்ளீர்களா? சுவரில் தொங்கும் அவர் துப்பாக்கியோ பழமையும், துருவேறியதுமாம், அவரது வேதப்புத்தகம் கிழிந்தும் அழுக்குமாம் அதை நாம் தொடுவதோ அபூர்வம் (அது சரிதான்) ஆனால் அதன் செய்தியோ அந்நாளில் நம்மைச் சந்திக்குமாம், தேவ சத்தியம் இன்னமும் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறது! மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! இவர் சத்தியம் முன் செல்லுகிறது. 103இப்பாடலை நான் கற்றுக்கொள்ள போகிறேன். நான் இக்காலையில் இப்பாடலை எழுதிக் கொண்டிருக்கையில், சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் எனது பழைய துப்பாக்கியின் மேல் என் கையை வைத்தேன். இனிமேல் அதிகம் தாமதிக்காது என்பதை நான் அறிவேன். துப்பாக்கியோ பழமையும் துருவேறியதுமாய், சுவரில் தொங்குகிறதுவே, வேதப்புத்தகமோ கிழிந்து அழுக்கடைந்தது அதைத் தொடுவதோ அபூர்வம், ஆனால் வேதத்திலே அவரது செய்தி ஓர் நாள் நியாயத்தீர்ப்பில் கொண்டு வருமே, அவர் சத்தியம் விடாது அணிவகுத்து செல்கிறது. தேவனுடைய சத்தியம் இவ்வேதாகமமே. அது சென்றுகொண்டேயிருக்கிறது. “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. 104இந்த முதிர்வயதான, தேசந்தோறும் சுற்றிப்போய் பிரசங்கிக்கும் பிரசங்கியானவர் தனது தோளில் துப்பாக்கியோடும், கையில் வேதாகமத்தோடும் புல்வெளிப் பிரதேசங்களை கடந்து சென்று, மலைகள் மேல் ஏறிக் கடந்து, பள்ளங்களிலும், எங்கிலும் சென்று, வரப்போகும் ஆயிர வருஷ அரசாட்சியைப் பற்றியும், அநியாயக்காரருக்கான உக்கிரமான நியாய்த்தீர்ப்பை பற்றியும், நீதியுள்ளோருக்காக உள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பற்றியும் பிரசங்கித்து வந்தார். அது உண்மையானது தான். அந்த பழைய வின்செஸ்டர் துப்பாக்கி துருவேறிப்போய் விட்டது. வேதாகமத்திற்குப் பதிலாக பாலுணர்வைத் தூண்டும் புத்தகம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் தேவனுடைய சத்தியமானது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. அவர் எவ்வளவு உண்மையுள்ளவரா யிருந்தாரோ, அதே போல் தாம் இப்பொழுதும் இன்றும் உண்மையுள்ளவராயிருப்பதை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவ சத்தியம் விடாது முன்னேறுகிறது. மகிமை, மகிமை அல்லேலூயா! மகிமை, மகிமை அல்லேலூயா! மகிமை, மகிமை அல்லேலூயா! தேவ சத்தியம் முன்னேறிச் செல்கிறது 105ஏன்? யாராவது அதை ஏற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரே. அதை நாம் மீண்டும் பாடுவோம். நாம் இங்கே, மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், லுத்தரன்கள் என்று இவ்வாறாக பல சபைகளின் மக்களாக இங்கு கலந்து போய்விட்டோம். நாம் அந்த கடைசிப் பல்லவியைப் பாடும்போது நீங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பவர்களோடு ஒருவரோடொருவர் கை குலுக்கிக் கொள்ளுங்கள். பின்பு இங்கிருந்து நாம் கலைந்து செல்வோம். - எபி 13:8 தத்தமது சபைகளுக்குப் போக வேண்டியவர்கள், இன்றிரவு அவ்வாறு போய் விடுங்கள். எனக்காக உங்களது போதகரை வாழ்த்துங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். பிறகு மீண்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். உங்களில் யாருக்காவது போவதற்கென்று சபை ஏதும் இல்லையென்றால், எங்கள் சம்பந்தமான உங்களுக்கு ஏதாவது இருந்தால்.... (சகோ. பிரான்ஹாம், சகோதரன் நெவில் அவர்களிடம் பேசுகிறார் —- ஆசிரியர்) இன்றிரவு சகோதரர் நெவில் அவர்களுடைய செய்திக்குப் பிறகு “கர்த்தருடைய வருகையின் மின்னும் சிகப்பு வெளிச்சம்” (வால்யூம் 5 நிர். 4 ஆசிரியர்) என்ற செய்தியை நான் கொடுக்கவும், அதை பதிவு செய்யவும் விரும்புகிறேன். கர்த்தர் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. அடுத்த ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்கு சித்தமானால், இன்னொரு செய்தியை பதிவு செய்யும்படி நான் மீண்டும் இங்கு வருவேன். ஏனெனில் அதற்கடுத்த வாரத்தில் நான் ஆர்கான்ஸாவில் இருந்தாக வேண்டும். 106நல்லது, நாம் மீண்டும் பாடி, ஒருவரோடொருவர், கை குலுக்கிக் கொள்வோம். மகிமை, மகிமை, அல்லேலூயா! மகிமை, மகிமை, அல்லேலூயா! (கர்த்தராகிய இயேசுவே...) சபையார் பாடுகையில், சகோதரர் பிரான்ஹாம் ஜெபிக்கிறார் ——- ஆசிரியர்) 107தேவனுக்கு துதி உண்டாவதாக! நாம் இப்பொழுது ஒரு க்ஷணம் தலைகளை வணங்குவோம். சகோதரர் ரட்டல் அவர்களே! நீங்கள் சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். ஒரு நிமிடம் இங்கே நீங்கள் முன்னுக்கு வாருங்கள், சகோதரன் ரட்டல் அவர்கள் நம்மோடு ஒத்துழைப்பவர்களில் ஒருவர். நம்மிடையே உள்ள ஸ்தாபனமல்லாத சிறிய சபைகளின் ஒத்துழைப்பு அல்லது ஐக்கியத்தில் உள்ள ஒருவர் அவர், சுவிசேஷத்திற்காக சகோதரன் ரட்டல் அவர்கள் மிகவும் தீரமானதொரு நிலையை எடுத்திருக்கிறார் என நான் கேள்விப்பட்டேன். எனவே சகோ. ரட்டல் அவர்களே! கடந்து செல்லும் பாதை நெடுகிலும், தேவன் சௌகரியமான பூப்படுக்கையை வாக்குத்தத்தம் செய்யவில்லை. மாறாக, போராட்டத்தையே வாக்குரைத்திருக்கிறார். அவர் வெற்றியையும் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது அப்படித்தான் இருக்கிறது. நான் இந்த நிலையை முதலில் எடுத்தபொழுது, எனது தாயும் தந்தையுமே என்னை வீட்டை விட்டு வெளியேற்ற எண்ணினார்கள் என்ற காரியத்தை நான் நினைவு கூறுகிறேன். ஆனால், ஓ, நான் எவ்வாறு அவர்களுக்கும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன்! இன்று எனக்கு நம்பிக்கை இருப்பதின் காரணமே நான் எடுத்துள்ள இந்த நிலைதான், வயது சென்ற அந்த தேசாந்திரியான பிரசங்கியின் காலமுதல் இது வரையிலும் உள்ள வேதத்தின் செய்திக்காக நான் சந்தோஷப்படுகிறேன். மக்கள் அச்செய்தியை எடுத்து அதை திருத்தம் செய்து, அதை ஸ்தாபனமாக்கி, சடங்காச்சாரங்களை அதில் உட்புகுத்தின போதிலும், சத்தியமானது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. சரியா? அது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. 108தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! வெகுவிரைவில் உங்கள் யாவரையும் மீண்டும் காணுவோம் என நம்புகிறேன். அது வரைக்கும் டேப்பிலும், இங்கு நேரிலும் செய்தியைக் கேட்பவர்கள் எனக்கு இப்பொழுது ஒரு தயவு செய்வீர்களா? எதற்கென்றால், நான் எனக்குள் ஏற்பட்ட அந்தவிதமான மனோபாவத்தினால் (Complex) இழந்து போனதை, தேவன் என் இருதயத்திற்குள் போடும்படியாகத்தான். நமக்குள் மனோபாவத்தை ஏற்படுத்திக்கொள்வது சுலபம்தான். இங்கு அமர்ந்திருக்கிற சகோதரன் வே அவர்களுடன் அன்றொரு நாள் ஒரு பேட்டி ஏற்பாடாகியிருந்தது. அவர் மிகவும் நல்ல சகோதரன்தான். ஆனால் அவரைச் சுற்றிலும் அவர் ஒரு விதமான மனோபாவத்தை உண்டாக்கிக் கொண்டார். அதே காரியத்தைச் செய்தார். சகோதரன் வே அவர்களே! அவ்வித மனோபாவத்தைப் பெறுவது சுலபம்தான். உங்கள் மனதில் ஏதாவதொரு காரியத்தை வைத்துக் கொண்டு, அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அது சரியா இல்லையா என்பதை திரும்பிப்போய் வேதத்தோடு சரிபார்த்துக் கொண்டு அதிலிருந்து முன்னேறிச்செல்லுங்கள். ஆம், மக்களைப் பற்றிய உணர்வை நீங்கள் இழந்து போகாதீர்கள். மக்கள் மரத்தூளிலிருந்து உண்டானவர்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் ஆத்துமாவும், மாமிசமும், இரத்தமும் கொண்ட மானிடர் ஆவார்கள். நீங்கள் யாவரும் உங்களுக்கு விருப்பமானால், எனக்காக ஜெபியுங்கள். தேவன் இப்பொழுது உங்களை ஆசீர்வதிப்பாராக. 109நாம் தலைகளை வணங்குவோம். சகோதரன் ரட்டல் விரும்பினால்...... (சபையின் மத்தியில் இருந்து ஒரு மனிதர் பேசுகிறார் —- ஆசிரியர்) ஆகட்டும் சகோதரனே (சகோதரன் பிரான்ஹாமிடம் சபையின் நடுவிலிருந்து ஒருவர் பேசுகிறார் — ஆசிரியர்) தேவனுக்கு துதி உண்டாவதாக. இங்கே ஒரு ஊழியக்காரர் இருக்கிறார். அவரை சிலருக்கு தெரியாமலிருக்கலாம். அவர் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர். வேறு வழியில் நான் செல்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறதான அந்த சொப்பனங்களைக் கண்டவர்களில் அவரும் ஒருவர் - கடைசி முறையாக, மேற்கு நோக்கி செல்வதைப் பற்றி, சகோதரன் ஜே.டி.பார்னல் என்பது அவரது பெயர். 110இப்பொழுது, இங்கே, சொப்பனங்காணுகிறவர்களைப் பற்றியும் சொப்பனங்களைப்பற்றியும் ஆச்சரியப்படக்கூடிய சில புதியவர்கள் இருக்கக் கூடும். இல்லை , நாம் எல்லாவிதமான சொப்பனங்களையும் பின்பற்றிக் கொண்டு போகக் கூடியவர்களல்ல. ஆனால், நாங்கள், “என் ஆவியை கடைசி நாட்களில் ஜனங்கள் மேல் ஊற்றுவேன்; அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், தரிசனங்களைக் காண்பார்கள், சொப்பனங்களைக் காண்பார்கள்” என்று வேதம் கூறுவதை விசுவாசிக்கிறோம். அவைகள் வேதத்தின்படி இருக்கிற வரையிலும், அதை விசுவாசித்து, அதை பற்றி பிரசிங்கிக்க வேண்டியது எனது கடமையாகும். ஜனங்கள் சொப்பனங்களைக் கண்டு சொல்லும்போது, கர்த்தர் அதற்குரிய அர்த்தத்தை சொல்லாவிடில் அதை நாம் விட்டுவிடுகிறோம். அது ஏதோ ஒன்றாக இருக்குமானால்... யாராவது ஒருவர் அன்னிய பாஷைகளில் பேசினால், அது சபைக்கு உரியதாக இருக்க வேண்டும். அது நிறைவேற வேண்டியதாகவும் இருக்கிறது. அது அவ்வாறு நிறைவேறாவிடில், அது ஒரு அசுத்த ஆவியினால் உண்டானதாயிருக்கும். அது நிறைவேற வேண்டிய ஒன்றாகும்; ஏனெனில், அன்னிய பாஷைகளின் வியாக்கியானமானது தீர்க்கதரிசனமாயிருக்கிறது, அது சரியானது என்று நாம் அறிவோம். எனவே வேதம் போதிக்கிறபடி ஜீவிக்க நாம் முயலுகிறோம். அதிலிருந்து ஒன்றையும் நீங்கள் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். அதில் எழுதியிருக்கிறபடியே ஜீவியுங்கள். கர்த்தர் துதிக்கப்படுவாராக. சகோதரன் ஜே.டி. நான் புறப்பட்டுச் சென்று பாவத்தோடு ஒத்துப்போக தேவன் எனக்குக் கூறவில்லை. ஆனால் புறப்பட்டு போய், வேதம் கூறுகிறபடியே செய்துகொண்டேயிருக்க சொன்னார் என்று விசுவாசிப்பதற்கு அது எனக்கு உதவியாயிருக்கிறது. 111சகோதரனே, நாம் ஜெபம் பண்ணுவோமாக... (சபையில் ஒரு மாது, சப்தமிடுகிறார்கள் —- ஆசிரியர்) யாரோ மயக்கமடைந்து விட்டார்கள். ஒரு நிமிஷம், யாவரும் அமைதியாக அமருங்கள். (சற்று அமைதிக்குப் பிறகு சகோ. பிரான்ஹாம் சபையோரின் மத்தியிலிருந்து ஜெபம் செய்வது கேட்கப்படுகின்றது — ஆசிரியர்) பரம பிதாவே, சகோதரன் வே அவர்களை சுகமாக்கும்படி உமது இரக்கம் கிடைப்பதாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவர் வித்தியாசமான மனிதனாக ஆக்கப்படுவாராக. இந்த உலகத்தில் அவருக்கு பெலத்தைக் கொடுத்ததற்காக கர்த்தாவே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எனக்கு உதவும் ஆண்டவரே, அவரது இருதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்து விட்டது, அவ்வளவுதான். நான் நிற்கிற இதே பீடத்திலிருந்து அடக்க ஆராதனைப் பிரசங்கங்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவருக்காக நான் நிற்கிற இடத்திலிருந்து, கிறிஸ்துவிடம் ஜெபிக்கப்பட்டிருக்கிறது. நான் அவரிடம் போய் பார்த்தபோது அவருடைய கண்கள் மூடிவிட்டன, நாடித்துடிப்பு நின்றுபோயிருந்தது. இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிட்ட மாத்திரத்திலேயே மீண்டும் நாடித்துடிப்பு வர ஆரம்பித்து விட்டது. சிலுவையின் ஊழியக்காரன் என்ற முறையில் இதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூறுகிறேன். அவர் அற்புதமானவரல்லவா? ஒரு மாரடைப்பு நோய். நாம் போய் விட்ட பிறகு இது நிகழாமல், நல்ல வேளை நாம் இங்கு இருக்கும் போதே அது நடந்துவிட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனுடைய கிருபையைப் பாருங்கள். கர்த்தர் போற்றப்படுவாராக. நமது தலைகளை வணங்குவோமாக. 112பரம பிதாவே, உம்முடைய தயவுக்காகவும், இரக்கத்திற்கும் இப்பொழுது உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீர் எப்பொழுதும் எங்கள் மத்தியிலிருக்கிறீர். எனது விளக்கில் எண்ணெயைத் தாரும், ஆண்டவரே! கர்த்தருடைய கோலை எனக்குத் தந்து, அதினால், நான் வியாதிப்பட்டவர்களுக்கும், துன்பப்பட்டவருக்கும் நேராக நீட்ட கிருபை செய்யும். தேவையுள்ளவர்களுக்கு விடுதலையைக் கொண்டு வரவும், புறக்கணிக்கிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரவும் தக்கதாக, எனக்குத் தாரும். அதை எனக்கு அளித்தருளும், பிதாவே, உமது தயவுக்காக, நாங்கள் உமக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நன்றி செலுத்துகிறோம். சகோதரர் ரட்டல், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. (சகோதரன் ரட்டல் ஜெபிக்கிறார் — ஆசிரியர்)